ஐபிஎல் தொடரில் இன்று நடந்து முடிந்த போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி வீழ்த்தியது.
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது. மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்களை இழந்து 187 ரன்கள் அடித்தது.
188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் – உத்தப்பா களமிறங்கினார்கள். இதில் 1 ரன் மட்டுமே அடித்து உத்தப்பா தனது விக்கெட்டை இழக்க, அவரைதொடர்ந்து களமிறங்கிய சான்ட்னர், 9 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய சிவம் துபே, 8 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இதனைதொடர்ந்து அம்பதி ராயுடு களமிறங்க, ருதுராஜுடன் இணைந்து அதிரடியாக ஆடிவந்தார். 30 ரன்கள் அடித்து ருதுராஜ் தனது விக்கெட்டை இழக்க, ஜடேஜா களமிறங்கி நிதனாக ஆடிவந்தார். அதிரடியாக ஆடிய ரஹானே 78 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய தோனி கடந்த போட்டியைப்போல அணியை வெற்றிபெற வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 12 ரன்கள் அடித்து தோனியும் தனது விக்கெட்டை இழந்தார்.
இறுதியாக சென்னை அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்து 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதன்மூலம் பஞ்சாப் அணி புள்ளிப்பட்டியலில் 6-ம் இடத்திற்கு முன்னேறியது.
கோழிக்கோடு : கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் நேற்று அவசர சிகிச்சை பிரிவு…
கோவா : நேற்று (மே 2) கோவாவில் உள்ள ஒரு கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் , பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
சென்னை : தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் இன்று (மே 3)…
கோவா : ஷிர்கானில் ஆண்டுதோறும் நடைபெறும் தேவி லாராய் ஜாத்ராவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏழு பேர்…
பெங்களூர் : இந்த சீசனின் 52வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மீண்டும்…