CSK vs KKR:ஐபிஎல்லின் இன்றைய 38 வது போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) 38 வது போட்டியில்,இன்று மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியானது,மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கே.கே.ஆர்) அணியை எதிர்கொள்கிறது.
அதன்படி,இன்று மாலை 3.30 மணிக்கு,அபுதாபி ஷேக் சயீத் ஸ்டேடியத்தில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெறவுள்ளது. இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இணைந்து 26 ஆட்டங்களில் விளையாடியுள்ளன. அதில், 15 போட்டிகளில் சிஎஸ்கே வெற்றி பெற்றுள்ளது.மறுபுறம், கேகேஆர் ஒன்பது ஆட்டங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
இந்த நிலையில்,ஐபிஎல்லின் இன்றைய 38 வது போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது.கொல்கத்தா அணி இன்று சென்னையை வீழ்த்துமா? என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் லெவன் அணி:
ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டு ப்ளெசிஸ், மொயீன் அலி, அம்பதி ராயுடு, சுரேஷ் ரெய்னா, எம்எஸ் தோனி (w/c), ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரன், ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், ஜோஷ் ஹேசில்வுட்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் லெவன் அணி:
சுப்மன் கில், வெங்கடேஷ் ஐயர், ராகுல் திரிபாதி, இயோன் மோர்கன் (இ), நிதிஷ் ராணா, தினேஷ் கார்த்திக் (வ), ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், லோக்கி பெர்குசன், வருண் சக்கரவர்த்தி, பிரசித் கிருஷ்ணா.
சென்னை : மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் பரப்புரை மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு…
சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய குரூப்-4 தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் என்று…
பீகார் : இந்த ஆண்டு பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தலுக்கு முன்னதாக நிதிஷ் அரசு…
டெல்லி : கடந்த மாதம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. அது போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம். அதில்…
நெல்லை : 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில்,…
லண்டன் : 'ஹாரி பாட்டர்' படத் தொடரில் ஹெர்மியோன் கிரேன்ஜர் வேடத்தில் நடித்து பிரபலமான ஹாலிவுட் நடிகை எம்மா வாட்சன்…