CSKvsRCB : துபே – ஜடேஜா கூட்டணியில் சிஎஸ்கே வெற்றி ..! 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி ..!

Csk won [file image]

CSKvsRCB : ஐபிஎல் 2024 தொடரில் சென்னை, பெங்களுரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. பெங்களூரு அணியின் தொடக்க வீரரான ஃபாப் டுப்ளஸி சிறப்பாக ஆட்டத்தை தொடங்கினார் சென்னை அணியின் தீபக் சஹர் மற்றும் துஷார் தேஷ்பாண்டேவின் பந்து வீச்சை பவுண்டரிகள் விளாசி ஸ்கோரை உயர்த்தினார். அதை தொடர்ந்து, சரியான சமயத்தில் முஸ்தபிசுர் ரஹ்மான் சிறப்பாக பந்து வீசி டுப்ளஸி விக்கெட்டை எடுத்து அசத்தினார்.

Read More :- கெய்லுக்குப் பிறகு வேகமாக வரலாறு சாதனை படைத்த விராட் கோலி..!

அவர் ஆட்டமிழந்த உடன் அடுத்தடுத்து விக்கெட்டை பெங்களூரு அணி இழந்து தடுமாறியது. பெங்களூரு அணி ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலியும், மேக்ஸ்வெல்லும் சிறப்பாக விளையாடாமல் சொதப்பினார்கள். அதன் பிறகு களமிறங்கிய தினேஷ் கார்த்திக் மற்றும் அனுஜ் ராவத் நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள். இதனால் பெங்களூரு அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்தது.

Read More :-  IPL 2024 : தொடங்கியது ஐபிஎல் திருவிழா ..! கொண்டாட்டத்தில் மூழ்கிய சேப்பாக்கம் ..!

அதை தொடர்ந்து 174 ரன்களை எடுத்தால் வெற்றி என களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர்களான ருதுராஜ் கெய்க்வாடும், ரச்சின் ரவீந்திராவும் பவுண்டரிகளை அடித்தாலும், ருதுராஜ் 15 ரங்களில் ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றினார். அதன் பின் களமிறங்கிய ரஹானேவும் சிக்ஸர் பவுண்டரிகள் அடித்தாலும் நிதானமாக விளையாடாமல் 19 பந்துகளில் 27 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணியின் எந்த ஒரு வீரரும் அதிரடியாக விளையாடினாலும் நிதானமாக நின்று விளையாடாமல் விக்கெட்டுகளை இழந்தனர்.

இதனை தொடர்ந்து களத்தில் இருந்து ரவீந்திர ஜடேஜாவும், சிவம் துபேவும் பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றியின் பாதைக்கு மெதுவாக அழைத்து சென்றனர். இருவரின் கூட்டணியில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரவீந்திர ஜடேஜா 17 பந்துகளில் 25 ரன்களும், துபே 27 பந்துகளில் 34 ரன்களும் எடுத்து அணியை வெற்றி பெற வைத்தனர்/.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 05122024
Maharashtra cm
Somanath
colours (1) (1)
Tughlaq AliKhan
rinku singh kkr Sunil Narine