DCvsPBKS: பிரப்சிம்ரன் சிங் அதிரடி சதம்..! டெல்லி அணிக்கு இதுவே இலக்கு..!

ஐபிஎல் தொடரில் இன்றைய DC vs PBKS போட்டியில், முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 167/7 ரன்கள் குவித்துள்ளது.
16-வது ஐபிஎல் தொடரின் இறுதிக்கட்ட பரபரப்பான போட்டிகள் நடைபெற்று வருகிறது. இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்ற நிலையில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இரண்டாவது போட்டியில் டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் டெல்லி அருண் ஜெட்லீ ஸ்டேடியத்தில் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்படி, பஞ்சாப் அணியில் முதலில் பிரப்சிம்ரன் சிங் மற்றும் ஷிகர் தவான் தொடக்க ஆட்டகாரர்களாக களமிறங்கினர். இதில் ஷிகர் தவான் 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அவரையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி வீரர்கள் மும்பை அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க இயலாமால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வந்தனர்.
ஒருபுறம் விக்கெட்டுகளை இழந்தாலும், மறுபுறம் பிரப்சிம்ரன் சிங் அதிரடியாக விளையாடி பவுண்டரிகள், சிக்ஸர்கள் எனப் பறக்கவிட்டு அரைசதம் விளாசினார். அவருடன் இணைந்து விளையாடிய சாம் கர்ரன் 20 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். ஆனால், பிரப்சிம்ரன் சிங் ஆட்டமிழக்காமல் 63 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.
இறுதியில், முகேஷ் குமார் வீசிய பந்தில் பிரப்சிம்ரன் சிங் ஆட்டமிழந்தார், முடிவில் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்துள்ளது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 103 ரன்களும், சாம் கர்ரன் 20 ரன்களும் குவித்துள்ளனர். டெல்லி அணியில் இஷாந்த் சர்மா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.