முக்கியச் செய்திகள்

ஒரு வருடத்திற்கு பிறகு இந்திய அணியில் நுழைந்த தீபக் சாஹர்..!

Published by
murugan

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே ஐந்து டி20 தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று மூன்றாவது போட்டி கவுகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மேத்யூ வேட் முதலில் பந்துவீச முடிவு செய்தார்.

இந்த போட்டிக்கு முன் இந்திய அணியில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டது. இத்தொடருக்கான அணியில் இடம் பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார், தனது திருமணத்திற்காக அணியில் இருந்து நீக்குமாறு பிசிசிஐயிடம் கோரிக்கை விடுத்தார். அவரின் கோரிக்கையை பிசிசிஐ ஏற்றுக்கொண்டு இந்திய அணியில் மீதமுள்ள போட்டிகளுக்கு முகேஷ் குமாருக்கு பதிலாக இந்திய அணியில் தீபக் சாஹரும் சேர்க்கப்பட்டுள்ளார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்றைய மூன்றாவது போட்டியில் இந்திய அணியில் முகேஷ் குமாருக்கு பதிலாக அவேஷ் கான் இடம்பிடித்தார். ஆனால் நான்காவது போட்டிக்கு முன்னதாக தீபக் சாஹர் இந்திய அணியில் இணையவுள்ளார். இவரை கேப்டன் சூர்யகுமார் யாதவ் ப்ளேயிங் லெவனில் சேர்க்க வாய்ப்பு உள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்பு குஜராத் அணிக்கு எதிரான விஜய் ஹசாரே டிராபி போட்டியில் தீபக் சாஹர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தீபக் சாஹரின் இந்த சிறப்பான ஆட்டத்தின் அடிப்படையில் ராஜஸ்தான் அணி குஜராத்தை 128 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தீபக் சாஹர் கடைசியாக டிசம்பர் 2022 இல் இந்தியாவுக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

Recent Posts

கள்ளழகர் திருவிழா: ”இதை செய்யவே கூடாது” கோவில் நிர்வாகம் விதித்த கட்டுப்பாடுகள்.!

மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில், பக்தர்கள் நீரை பீய்ச்சி…

11 minutes ago

களத்தில் இறங்கிய இந்திய விமானப்படை! உ.பி அதிவிரைவு சாலையில் தீவிர பயிற்சி!

லக்னோ : காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்திய முப்படைகளும் தயார்நிலையில் இருக்க பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு…

20 minutes ago

”பலரின் தூக்கத்தை கலைக்கும் காட்சி இது” – கேரள விழிஞ்சம் துறைமுகம் திறப்பு விழாவில் பிரதமர் மோடி.!

திருவனந்தபும் : கேரளாவில் ரூ.8,867 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விழிஞ்சம் துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். கேரள…

48 minutes ago

கங்குவா வசூலை பீட் செய்ததா ‘ரெட்ரோ’.? முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.?

சென்னை : நடிகர் சூர்யா நடிப்பில் ரிலீசாகியுள்ள 'சூர்யா, பூஜா ஹெக்டே நடித்த 'ரெட்ரோ' திரைப்படம் நேற்று (மே 1)…

1 hour ago

இரட்டைக் கொலை., திமுக ஆட்சியின் லட்சணமா? இபிஎஸ் கடும் கண்டனம்!

சென்னை : ஈரோடு மாவட்டம் சிவகிரி விலாங்காட்டு வலசை பகுதியை சேர்ந்த ராமசாமி - பாக்கியம் தம்பதி அவர்களின் பண்ணை…

1 hour ago

5 மற்றும் 8ஆம் வகுப்பில் ஃபெயில்! சிபிஎஸ்இ முடிவுக்கு அன்பில் மகேஷ் கடும் கண்டனம்!

சென்னை : தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாநில அரசு பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல்…

3 hours ago