4 ஓவரில்.., 4 முக்கிய விக்கெட் வீழ்த்திய தீபக் சாஹர்..!

மாயங்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், தீபக் ஹூடா மற்றும் நிக்கோலஸ் பூரன் ஆகிய 4 முக்கிய விக்கெட்டை தீபக் சஹர் வீழ்த்தினார்.
ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச முடிவு செய்தனர்.
இன்றைய போட்டியில் முதலில் பஞ்சாப் அணி களமிறங்கியது. இப்போட்டியில் தீபக் சாஹர் 4 ஓவர் வீசி நான்கு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில், மாயங்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், தீபக் ஹூடா மற்றும் நிக்கோலஸ் பூரன் ஆகிய 4 முக்கிய விக்கெட்டை வீழ்த்தினார்.
தீபக் சாஹர் 4 ஓவர் வீசி ஒரு ஓவர் மெய்டன் செய்துள்ளார். தீபக் சஹர் மொத்தமாக 13 ரன்கள் மட்டுமே கொடுத்து உள்ளார். பஞ்சாப் அணி 15 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 73 ரன்கள் எடுத்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025