வேற லெவலில் பந்து வீச்சில் மிரட்டிய டெல்லி.., ஆடிப்போன மும்பை..!

மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 137 ரன்கள் மட்டும் அடித்தனர்.
இன்றைய ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதி வருகிறது. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தனர்.
மும்பை அணியில் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மாவும், குயின்டன் டி கோக் இருவரும் களமிறங்கினார். ஆனால் ஆட்டம் தொடக்கத்திலேயே ஒரு ரன்னில் குயின்டன் டி கோக் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து இறங்கிய சூர்யகுமார் யாதவ், ரோஹித் இருவரும் நிதானமாக விளையாடி அணியின் எண்ணிக்கையை சற்று உயர்த்தினர்.
நிதானமாக விளையாடிவந்த சூரியகுமார் 24 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். அதிரடியாக விளையாடி வந்த ரோகித் சர்மா அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 44 ரன்னிலும் விக்கெட்டை இழந்தார். அடுத்து இறங்கிய ஹர்திக் பாண்டியா ரன் எடுக்காமலும், க்ருனல் பாண்டியா 1, பொல்லார்ட் 2 ரன்னிலும் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினர்.
கடைசியில் இறங்கிய ஜெயந்த் யாதவ் 23 ரன்னில் வெளியேறினார். இறுதியாக மும்பை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 137 ரன்கள் மட்டும் அடித்தனர். டெல்லி அணியில் அமித் மிஸ்ரா 4 விக்கெட்டையும், அவேஷ் கான் 2 விக்கெட்டையும் பறித்தனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025