RCBvsDC : டாஸ் வென்று டெல்லி பௌலிங் தேர்வு..அதிரடி காட்டுமா பெங்களூர்?
பெங்களூர் டெல்லி இரண்டு அணிகளும் இதற்கு முன்னதாக 31 முறை மோதிய நிலையில் அதிகமுறை பெங்களூர் தான் வெற்றிபெற்றுள்ளது.

பெங்களூர் : புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில் இருக்கும் பெங்களூர் அணியும் இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மோதுகிறது. பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
டெல்லி :
ஜே. ஃப்ரேசர்-மெக்குர்க், கே.எல். ராகுல் (WK), எஃப். டு பிளெசிஸ், ஏ. படேல் (C), டி. ஸ்டப்ஸ், ஏ. சர்மா, வி. நிகாம், எம். ஸ்டார்க், கே. யாதவ், எம். ஷர்மா, எம். குமார்.
பெங்களூர் :
பிலிப் சால்ட், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார்(C), லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா(WK), டிம் டேவிட், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள்
இதுவரை இந்த இரண்டு அணிகளும் 31 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் 19 முறை பெங்களூர் அணியும், 11 முறை டெல்லி அணியும் வெற்றிபெற்றுள்ளது. நேருக்கு நேர் வைத்து பார்க்கையில் பெங்களூர் அதிகமான வெற்றிகளை பதிவு செய்திருந்தாலும் இந்த சீசனை பொறுத்தவரையில் டெல்லி அணி மிரட்டலான பார்மில் இருக்கிறார்கள். ஏனென்றால், விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றிபெற்று ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாமல் இருக்கிறார்கள்.
அதே சமயம் பெங்களூர் அணியும் 4 போட்டிகள் விளையாடி 1 போட்டியில் மட்டுமே தோல்வியை சந்தித்திருக்கிறது. இந்த சீசனில் இரண்டு அணிகளுமே செம பார்மில் இருப்பதன் காரணமாக போட்டி மிகவும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டி சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் காரணத்தாலும் முதலில் பெங்களூர் பேட்டிங் செய்கிறது என்ற காரணத்தால் எத்தனை ரன்கள் அடிக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025