தோனிக்கு முழு மரியாதை அளிக்கப்படும் என்று பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்ற கங்குலி தெரிவித்துள்ளார்.
இன்று மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமையகத்தில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் பிசிசிஐ தலைவராக கங்குலி பொறுப்பேற்றார். பிசிசிஐ-யின் 39-வது தலைவராக பொறுப்பேற்றார் கங்குலி.
இதன் பின்னர் பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்ற கங்குலி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், பிசிசிஐ அமைப்பை ஊழல், லஞ்சம் இல்லாத நிலைமைக்கு மாற்றுவேன். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இனி முழு வெளிப்படைத் தன்மையுடன் செயல்படும்.
இந்திய அணியில் தோனிக்கு முழு மரியாதை அளிக்கப்படும். திறமை அடிப்படையில், மூத்த வீரர்கள் அணியில் தொடர்வது குறித்து முடிவு எடுக்கப்படும்.
சாம்பியன்கள் ஆட்டத்தை விரைவாக முடித்துக்கொள்ள கூடாது. கோலியின் ஆட்டத்தை எளிதாக்கவே வந்துள்ளேன், கடினமாக்க அல்ல .கேப்டன் கோலிக்கு அனைத்து வழிகளிலும் ஆதரவு அளிப்பேன் என்று தெரிவித்தார்.
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…