சர்வதேச கிரிக்கெட்டில் தோனி இனி சாதிக்கவோ, நிரூபிக்கவோ ஏதும் இல்லை -இந்திய கிரிக்கெட்வாரிய அதிகாரி!

இந்திய அணி அரையிறுதி போட்டியில் நியூஸிலாந்து அணியிடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது. இப்போட்டியில் இந்திய அணியின் தோனி ரன் அவுட் ஆனதால் தான் இந்திய அணி தோல்விடைந்தது என கூறினார்.இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வை பெற வேண்டும் என்றும் ஓய்வு பெற கூடாது என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில் ,தோனிக்கு பின் ரிஷிப் பண்ட் போன்ற இளம் வீரர்கள் உள்ளதால் அவர்களுக்கு வழி விட்டு தோனி ஓய்வு பெற வேண்டும் என கூறினார்.
உலகக்கோப்பையில் தோனியின் ஆட்டத்தை பார்த்தோம்.இறுதி கட்டத்தில் அதிகமாக தடுமாறுகிறார்.எந்த பந்தையும் தோனியால் எதிர்கொள்ள முடியவில்லை இதனால் இந்திய அணி பாதிப்படைகிறது.
அடுத்து நடக்க உள்ள வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவரை சேர்க்கபடமாட்டார்.சர்வதேச கிரிக்கெட்டில் தோனி இனி சாதிக்கவோ ,நிரூபிக்கவோ ஏதும் இல்லை அதனால் அவர் பெருந்தன்மையோடு ஓய்வை அறிவிக்கவேண்டும் இல்லைஎன்றால் அவரை அணியில் தேர்வு செய்ய வாய்ப்பு இல்லை என கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025