அடேங்கப்பா! இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா? வசூல் மழையில் நனையும் கபீர் சிங்!

இயக்குனர் சந்தீப் வங்கா இயக்கத்தில், கடந்த வருடம் 2017-ம் ஆண்டு விஜய் தேவாரகொண்டா நடிப்பில் தெலுங்கில் வெளியான திரைப்படம் அர்ஜுன் ரெட்டி. தற்போது இப்படம்

இயக்குனர் சந்தீப் வங்கா இயக்கத்தில், கடந்த வருடம் 2017-ம் ஆண்டு விஜய் தேவாரகொண்டா நடிப்பில் தெலுங்கில் வெளியான திரைப்படம் அர்ஜுன் ரெட்டி. தற்போது இப்படம் இந்தியில் கபீர் சிங் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்த படம் கடந்த 21-ம் தேதி திரைக்கு வந்துள்ளது.

இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, வசூல் வேட்டையில் சாதனை படைத்து வருகிறது. இப்படம் வெளியாகி 13 நாட்களில் 200 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் இப்படம் 23 நாட்களில் 250 கோடி வசூல் செய்து, அதிக வசூலை குவித்த படங்களின் பட்டியலில் 10-வது இடத்தை பிடித்துள்ளது. இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.