விதியை மீறியதால் ஆப்கானிஸ்தான் தோனி சஸ்பெண்ட் !

ஆப்கானிஸ்தான் அணி விக்கெட் கீப்பரும் , பேட்ஸ்மேனுமான முகமது ஷஷாத். இவரை ரசிகர்கள் ஆப்கானிஸ்தான் அணியின் தோனி என கூறுவார்கள். உலக கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற இவர் சில போட்டிகளில் மட்டும் விளையாடிய பின்னர் உடல் தகுதி காரணமாக நீக்கப்பட்டார்.
ஆனால் அதற்கு முகமது ஷஷாத் தான் முழு உடல் தகுதியுடன் இருப்பதாகவும் , தன்னை வேண்டுமென அணியில் இருந்து நீக்கியதாகவும் , ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் தனக்கு எதிராக சிலர் செயல்படுவதாகும் கூறினார் இதனால் அப்போது பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முகமது ஷஷாத்தை ஒப்பந்தத்தை காலவரையின்றி சஸ்பெண்ட் செய்து உள்ளது. இதற்கான காரணத்தை அணியை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறுகையில் , வீரர்கள் வெளிநாடு சென்றால் கிரிக்கெட் அவரிடம் அனுமதி பெற வேண்டும்.
ஆனால் முகமது முகமது ஷஷாத் தங்களிடம் அனுமதி வாங்காமல் விதியை மீறி சென்றதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என கூறியுள்ளது. இதனால் ஆப்கானிஸ்தான் அணிக்கு மட்டுமல்லாமல் முகமது ஷஷாத் மற்ற டி20 போட்டிகளில் விளையாட முடியாது என கூறியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025