முக்கியச் செய்திகள்

முதல் போட்டியில் டக் அவுட்.. 2-வது போட்டியில் 5 சாதனை படைத்த ஹிட்மேன்..!

Published by
murugan

உலகக்கோப்பையில் அதிவேக சதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை ஹிட்மேன் ரோஹித் பெற்றுள்ளார். இந்த சாதனை மூலம் சச்சின் டெண்டுல்கரை ரோஹித் பின்னுக்கு தள்ளிவிட்டார்.

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான உலகக்கோப்பையின் 9-ஆவது லீக் போட்டி  டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.  இப்போட்டியில் முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்தது.  பின்னர் இறங்கிய இந்திய அணி 35 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 273 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  முதல் போட்டியில் ரோஹித் டக் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

ஆனால் இந்த போட்டியில் இந்திய வீரர் ரோஹித் பல சாதனைகளை படைத்துள்ளார். ஆப்கானிஸ்தான் நிர்ணயித்த 273 ரன் இலக்குடன் இந்திய கேப்டன் ரோகித் சர்மாவும், இஷான் கிஷானும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ரோஹித் அதிரடியாக பேட்டிங் செய்து 30 பந்துகளில் அரைசதத்தை அடித்தார். பின்னர் தொடர்ந்து ரன்களை குவிக்க அடுத்த 33 பந்தில் ரோஹித் சதத்தை விளாசினார்.   இதனால் உலகக்கோப்பையில் இது அவரது 7வது சதமாகும். இதன் மூலம் உலகக்கோப்பைகளில் அதிவேக சதம் வீரர்கள் பட்டியலில் இடம்பிடித்ததுள்ளார்.

உலகக் கோப்பைகளில் அதிவேக சதம் விளாசிய வீரர்கள்: 
49 பந்துகள்  – ஐடன் மார்க்ரம்  2023
50 பந்துகள் – கெவின் ஓ’பிரைன்  2011
51 பந்துகள் – க்ளென் மேக்ஸ்வெல்  2015
52 பந்துகள் – ஏபி டி வில்லியர்ஸ் 2015
57 பந்துகள் – மோர்கன் 2019
63 பந்துகள் – ரோஹித் சர்மா 2023

உலகக் கோப்பையில் அதிக சதங்கள் வீரர்கள்: 
7 சதம்  – ரோஹித் சர்மா
6  சதம்- சச்சின் டெண்டுல்கர்
5  சதம்- ரிக்கி பாண்டிங்
5 சதம் – குமார் சங்கக்கார

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த ஜாம்பவான்கள் பட்டியலில் ரோஹித் தற்போது மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். சர்வதேச அளவில் ஒருநாள் போட்டிகளில் 31 சதங்கள் ரோஹித் அடித்துள்ளார். இதன் மூலம் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் சாதனை முறியடித்த்துள்ளார்.  கேப்டன் ரிக்கி பாண்டிங் 30 சதங்கள் அடித்துள்ளார். இந்தப் பட்டியலில் 49 ஒருநாள் சதங்கள் அடித்து சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார். விராட் கோலி (47  சதங்கள்) அடித்து 2வது இடத்தில் உள்ளார்.

மேலும், இன்றைய போட்டியில் ரோஹித்  சதம் அடித்ததன் மூலம் சனத் ஜெயசூர்யா சாதனையையும் முறியடித்தார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தொடக்க வீரர்களாக களமிறங்கி அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் 29 சதத்துடன் ரோஹித் சர்மா 2-வது இடத்தில் உள்ளார்.  சனத் ஜெயசூர்யா 28 சதம் அடித்து 3-வது இடத்தில் உள்ளார்.

45 – சச்சின் டெண்டுல்கர்
29 – ரோஹித் சர்மா
28 – சனத் ஜெயசூர்யா
27 – ஹாஷிம் ஆம்லா
25 – கிறிஸ் கெய்ல்

 இப்போட்டியில் ரோஹித் சர்மா 84 பந்துகளில் 16 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 131 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இப்போட்டியில் எட்டாவது ஓவரில் வேகப்பந்து வீச்சாளர் நவீன்-உல்-ஹக்கின்  ஐந்தாவது பந்தில் ரோஹித் சிக்ஸர் அடித்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த  கெய்ல்  சாதனையை ரோஹித் முறியடித்தார்.

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள்:
556 ரோஹித் சர்மா
553 கிறிஸ் கெய்ல்
476 ஷாஹித் அப்ரிடி
398 பிரெண்டன் மெக்கல்லம்
383 மார்ட்டின் குப்டில்

Published by
murugan

Recent Posts

உலகக்கோப்பை 2027 : ரோஹித் – கோலி விளையாடுவது ரொம்ப சவால்…ஹர்பஜன் சிங் எச்சரிக்கை!

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், 2025 ஜூலை 21 அன்று ஒரு…

3 hours ago

நாளை இந்த மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்…எச்சரிக்கை கொடுத்த வானிலை மையம்!

சென்னை : தெற்கு ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல,…

4 hours ago

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பூரண குணமடையனும் …எடப்பாடி பழனிசாமி பிரார்த்தனை!

சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கடந்த ஜூலை 21 அன்று, காலை நடைப்பயிற்சியின் போது லேசான தலைசுற்றல் ஏற்பட்டதை…

4 hours ago

ஆரம்பாக்கம் சிறுமி வன்கொடுமை வழக்கு : குற்றவாளி குறித்து தகவல் கொடுத்தால் வெகுமதி!

திருவள்ளூர் : மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் கடந்த ஜூலை 12-ஆம் தேதி அன்று 10 வயது சிறுமி ஒருவர்…

5 hours ago

உயிரிழந்த ஸ்டண்ட் கலைஞர் மோகன்ராஜ் குடும்பத்திற்கு பா.ரஞ்சித் ..சிம்பு செய்த உதவி!

சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடைபெற்று வந்த ‘வேட்டுவம்’ படப்பிடிப்பின்போது, (ஜூலை 13) கார் ஸ்டண்ட் காட்சி படமாக்கப்பட்டபோது…

5 hours ago

மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்… 2 நாள் அரசு நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு!

சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஜூலை 21 அன்று, காலை நடைப்பயிற்சியின் போது லேசான தலைசுற்றல் ஏற்பட்டதை அடுத்து,…

6 hours ago