நேற்று முன்தினம் நடந்த முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணி , நியூஸிலாந்து அணி உடன் மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் மோதியது.
முதலில் நியூஸிலாந்து அணி விளையாடி கொண்டு இருக்கும் போது 46.1 ஓவரில் 211 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் மழை பெய்ததால் போட்டி நிறுத்தப்பட்டு மீண்டும் நேற்று போட்டி தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய நியூஸிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 239 ரன்கள் எடுத்தது.
பின்னர் 240 என்ற இலக்குடன் களமிங்கிய இந்திய அணி தொடர்ந்து விக்கெட்டை இழந்தது இறுதியாக 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 221 ரன்கள் எடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இப்போட்டியில் இந்திய அணி 30.3 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 92 ரன்கள் அடித்து பரிதாப நிலையில் இருந்தது.அப்போது தோனி , ஜடேஜா இருவரும் கூட்டணியில் இனைந்து நிதானமாகவும் , அதிரடியாகவும் விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர்.
இந்நிலையில் உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணியில் கூட்டணியில் அதிக ரன்கள் அடித்த பட்டியலில் தற்போது தோனி , ஜடேஜா கூட்டணி முதலிடத்தில் உள்ளது. இவர்கள் இருவரின் கூட்டணியில் 116 ரன்கள் குவித்து உள்ளனர்.
இதற்கு முன் இந்திய அணியில் கங்குலி / டெண்டுல்கர் இவர்கள் இருவரின் கூட்டணியில் 2003 – ம் ஆண்டு அரையிறுதி போட்டியில் அடித்த 103 ரன்கள் அதிகபட்சமாக இருந்தது.தற்போது அவர்களின் சாதனையை முறியடித்து உள்ளனர்.
116* – தோனி / ஜடேஜா (7 வது) vs நியூஸிலாந்து , 2019
103 – கங்குலி / சச்சின் (2 வது) vs கென்யா, 2003
92 – அமர்நாத் / யஷ்பால் சர்மா (3 வது) vs இங்கிலாந்து , 1983
90 – எஸ் மஞ்ச்ரேகர் / சச்சின் (2 வது) vs இலங்கை , 1996
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…