தொடக்க வீரர்களாக களமிறங்கும் கில் -அபிஷக்! வெற்றியுடன் தொடங்குமா இந்திய அணி!

ZIMvIND, 1st T20 2024

ZIMvIND : உலகக்கோப்பை முடிந்த அடுத்த 7 நாட்களில் ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரின் முதல் டி20 போட்டியானது இன்று தொடங்கியுள்ள்ளது.

இந்த தொடரில், ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் இரண்டு டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் சாய் சுதர்சன், ஜிதேஷ் சர்மா மற்றும் ஹர்ஷித் ராணா புதிதாக சஞ்சு சாம்சன், ஷிவம் துபே மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு பதிலாக 15 பேர் கொண்ட இந்திய அணியில் சேர்த்தனர்.  இந்நிலையில், இன்று கில் தலைமையிலான இந்திய அணி, ஜிம்பாப்வே அணியை எதிர்த்து முதல் டி20 போட்டியை விளையாடவுள்ளது.

தற்போது, இந்த முதல் டி20 போட்டியானது ஹராரேவில் உள்ள ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்த போட்டியில் அனைத்து இந்திய ரசிகர்களும் இந்தியாவின் பேட்டிங்கின் போது கில் மற்றும் கெய்க்வாட் தான் முதலில் களமிறங்குவார்கள் என்று நினைத்தார்கள். ஆனால், தற்போது கில்லும் அதிரடி வீரரான அபிஷேக் ஷர்மாவும் களமிறங்கவுள்ளனர்.

அதன் பிறகு 3-வது விக்கெட்டுக்கு ருதுராஜ் கெய்க்வாட் களம் காண இருக்கிறார். தற்போது, இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது. அதனால், இந்திய அணியின் பேட்டிங் வரும் பொழுது எந்த வீரர் எப்போது இறங்குவார் என்று முழுவதுமாக தெரியவரும். தற்போது, இந்திய அணியில் விளையாட போகும் 11 வீரர்களை இந்திய அணி அறிவித்துள்ளது. மேலும், இந்த தொடரில் இந்திய அணிக்காக அபிஷேக் சர்மா, துருவ் ஜூரல் மற்றும் ரியான் பராக் ஆகியோர்  முதல்  முறையாக டி20 போட்டியில் அறிமுகமாகிறார்கள்.

விளையாடவுள்ள 11 வீரர்கள் :

இந்தியா அணி :

ஷுப்மன் கில் (கேப்டன்), அபிஷேக் சர்மா, ருதுராஜ் கெய்க்வாட், ரியான் பராக், ரின்கு சிங், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அவேஷ் கான், முகேஷ் குமார், கலீல் அகமது.

ஜிம்பாப்வே அணி :

தடிவானாஷே மருமணி, இன்னசென்ட் கையா, பிரையன் பென்னட், சிக்கந்தர் ராசா (கேப்டன்), டியான் மியர்ஸ், ஜோனாதன் காம்ப்பெல், கிளைவ் மடாண்டே (விக்கெட் கீப்பர்), வெஸ்லி மாதேவெரே, லூக் ஜாங்வே, பிளஸ்ஸிங் முசரபானி, டெண்டாய் சதாரா.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tvk manimaran
Harry Brook - Jamie Smith
vijay - chennai hc
Dog Bite Rabies
Nikitha
TVK Vijay