நேற்றைய போட்டியில் சச்சின் உடன் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர்பிச்சை!
நேற்றைய போட்டியில் இந்திய அணியும் ,இங்கிலாந்து அணியும் பலப்பரீச்சை மோதியது. இப்போட்டி எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது.போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது.
இங்கிலாந்து 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 337 ரன்கள் எடுத்தது. பிறகு 338 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை பறிகொடுத்து 306 ரன்கள் எடுத்து 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்றது.
இப்பொடியை காண நேரில் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர்பிச்சை வந்து உள்ளார்.அந்த புகைப்படத்தை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளது.அந்த பதிவில் “இன்றைய போட்டியில் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர்பிச்சை மற்றும் சச்சின் இருவரும் மைதானத்தில் இருந்ததாக கூறினார்”
Google CEO @sundarpichai along with the Master Blaster @sachin_rt at the game today ???????? pic.twitter.com/jKZKFgelUF
— BCCI (@BCCI) June 30, 2019
மேலும் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர்பிச்சை நடப்பு உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணியும் ,இந்திய அணியும் இறுதி போட்டியில் மோதும் என கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.