பப்ஜி விளையாட்டால் நேர்ந்த விபரீதம்! அண்ணனை கத்திரிக்கோலால் குத்திக் கொன்ற சிறுவன்!

இன்றைய இளம் தலைமுறையினர் பலரும் பப்ஜி விளையாட்டிற்கு அடிமையாகியுள்ளனர். அந்த வகையில், தானே மாவட்டம், பிவண்டியை சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன் பப்ஜி

இன்றைய இளம் தலைமுறையினர் பலரும் பப்ஜி விளையாட்டிற்கு அடிமையாகியுள்ளனர். அந்த வகையில், தானே மாவட்டம், பிவண்டியை சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன் பப்ஜி விளையாடுவதையே வழக்கமாக கொண்டு உள்ளான். இதற்க்கு அடிமையான சிறுவன் தனது அண்ணனான முகமது சேக்கின் செல்போனை எடுத்து விளையாடி வந்துள்ளார்.

இதனையடுத்து நேற்று காலையும் முகம்மது செக்கின் செல்போனை எடுத்து வழக்கம்போல் விளையாடி வந்துள்ளான். இதனை பார்த்து கோபமடைந்த சேக், தம்பியை கண்டித்து உள்ளார். இதனையடுத்து, ஆத்திரமடைந்த சிறுவன், அண்ணன் என்றும் பாராமல் முகமது சேக்கின் தலையை சுவரோடு மோத வைத்து, பக்கத்தில் இருந்த கத்திரிகோலால் சரமாரியாக குத்தியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த சேக் பரிதமாக உயிரிழந்தார். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகினறனர்.