ஆர்சிபி ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.! பெங்களூரு போட்டி இடமாற்றம்.! எங்கு தெரியுமா?

மழை காரணமாக ஹதராபாத் - பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி லக்னோவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

IPL Bengaluru match venue shifted

பெங்களூரு : கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழையால், நகரின் பல பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் கர்நாடகாவில் பெங்களூரு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மே 17ம் தேதி அன்று மழை காரணமாக பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறவிருந்த பெங்களூரு – கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டி ரத்து செய்யப்பட்ட நிலையில், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டது. அதில், கொல்கத்தா அணி ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது. இதனால், ஆர்சிபி ரசிகர்கள் பெங்களூரு ஆட்டத்தை கண்டு கழிக்காமல் ஏமாற்றம் அடைந்தது.

இந்த நிலையில், பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி மைதானத்தில் வரும் 23ஆம் தேதி நடைபெறவிருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகளுக்கு இடையிலான போட்டி, லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்திற்கு அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்