இந்த வருஷம் ஐபிஎல் கோப்பை அவுங்களுக்கு தான்! அடித்து கூறும் ஹர்பஜன் சிங்!

Published by
பால முருகன்

சென்னை : கொல்கத்தா அணிக்கு தான் இந்த முறை ஐபிஎல் கோப்பை கொல்கத்தா அணிக்கு தான்  கிடைக்கும் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

நடப்பாண்டு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில், எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த சீசனில் இதுவரை 13 போட்டிகள் விளையாடி 9 போட்டிகளில் வெற்றிபெற்று கொல்கத்தா அணி புள்ளி விவர பட்டியலில் முதலிடத்தை பிடித்து முதல் அணியாக பிளே ஆஃப்க்கு தகுதி பெற்றுள்ளது.

இதன் காரணமாக இந்த சீசனில் கொல்கத்தா அணி கோப்பையை வெல்ல அதிகமான வாய்ப்புகள் உள்ளதாக ரசிகர்கள் கூறி வரும் நிலையில், அவர்களை போலவே, இந்திய அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங்கும் கூட இந்த சீசன் கொல்கத்தா தான் கோப்பையை வெல்லும் என்று வெளிப்படையாகவே பேசியுள்ளார்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நடைபெற்ற கிரிக்கெட் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஹர்பஜன் சிங் பேசியதாவது ” கொல்கத்தா அணி இந்த சீசன் மிகவும் அருமையாக விளையாடி வருகிறது. அவர்களுடைய அணியில் நான் குறை என்று எதையுமே பார்க்கவில்லை எல்லாமே சிறப்பாக இருக்கிறது. மிடில் ஆர்டர், வேகம் மற்றும் சுழற்பந்து வீச்சு அனைத்தும் மிகவும் சிறப்பாக இருக்கிறது. ஒரு நல்ல அணிக்கு இருக்க வேண்டிய அணைத்து விஷயங்களும் கொல்கத்தா அணிக்கு இருக்கிறது.

பேட்டிங் பற்றியும் அவர்களுடைய அணியில் கவலை இல்லை. போட்டிகளை வெற்றி பெற்று கொடுக்க அவர்களிடம் நல்ல வீரர்கள் இருக்கிறார்கள். கோப்பையை வெல்லும் வலிமையான போட்டியாளர்கள் என்று நான் கொல்கத்தா அணியை நினைக்கிறேன். இந்த சீசனில் அவர்களை வீழ்த்துவது சற்று கடினமாக இருக்கும் என்று நினைக்கிறேன். பயங்கர கிரிக்கெட் விளையாடுகிறார்கள்.

எனவே, இந்த முறை கொல்கத்தா கோப்பையை வெல்ல வாய்ப்புகள் உள்ளது” எனவும் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.  மேலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2012 இல் முதல் ஐபிஎல் கோப்பையை வென்றது. 2014 -ஆம் ஆண்டு இரண்டாவது வெற்றியைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

ராஜஸ்தான் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி.!

ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…

7 hours ago

GT 4 கார் Race: ரேஸின்போது கார் டயர் வெடித்து விபத்து.! அஜித்துக்கு என்னாச்சு?

நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…

7 hours ago

RR vs PBKS : அதிரடி காட்டிய நேஹல் – ஷஷாங்க்.., மிரண்டு போன ராஜஸ்தான்.! டார்கெட் இது தான்.!

ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…

9 hours ago

சாத்தான்குளத்தில் கிணற்றில் கார் கவிழ்ந்து விபத்து…, 20 சவரன் நகைகள் மீட்பு.!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…

9 hours ago

தஞ்சையில் நாட்டு வெடி குடோனில் வெடிவிபத்து – 2 பேர் உயிரிழப்பு .!

ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…

12 hours ago

“சாலையோர கிணறுகளை ஆய்வு செய்க” – அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு.!

சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…

13 hours ago