Matt Henry [file image]
ஐபிஎல் 2024 : லக்னோ அணியில் இடம்பெற்றிருந்த டேவிட் வில்லிக்கு பதிலாக தற்போது மாட் ஹென்றி இடம்பெற்றுள்ளார்.
நடப்பாண்டில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் தற்போது ஒவ்வொரு போட்டியும் களைகட்டி கொண்டு நடைபெற்று பெறுகிறது. இது வரை 10 போட்டிகள் நடைபெற்று முடிந்திருக்கிறது. இதில் லக்னோ அணி ஒரு போட்டியை மட்டும் விளையாடி உள்ளது. அந்த ஒரு போட்டியிலும் லக்னோ அணி ராஜஸ்தான் அணியிடம் தோல்வியுற்று இருந்தது.
தற்போது இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், பஞ்சாப் அணியும் மோதவுள்ளது. இந்த போட்டியை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும் லக்னோ அணி இருந்து வரும் நிலையில் தற்போது அணியில் இடம்பெற்றிருந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் வீரரான டேவிட் வில்லி, தனது தனிப்பட்ட தேவைகளுக்காக இந்த ஐபிஎல் தொடரிலுருந்து வெளியேறி இருக்கிறார்.
டேவிட் வில்லியை லக்னோ அணியின் நிர்வாகம் ஐபிஎல் 2024 ஏலத்தின் போது ரூ.1.50 கோடிக்கு எடுத்தனர். அந்த நேரத்தில் ஐபிஎல் தொடர் தொடங்குவதுற்கு முன் டேவிட் வில்லி இந்த தொடரின் ஆரம்பத்தில் ஒரு சில போட்டிகளில் விளையாடமாட்டார் என தெரிவித்திருந்த நிலையில் தற்போது அவர் தனது தனிப்பட்ட தேவைகளுக்காக இந்த ஐபிஎல் 2024 தொடர் முழுவதிலும் இருந்து வெளியேறி உள்ளார் என தெரிய வந்துள்ளது.
இவருக்கு பதிலாக இந்த ஐபிஎல் தொடரில் நியூஸிலாந்து அணியின் வேக பந்து வீச்சாளரான மாட் ஹென்றியை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நிர்வாகம் எடுத்துள்ளது. மாட் ஹென்றி இதற்கு முன் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும், பஞ்சாப் கிங்ஸ் அணியிலும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் சென்னை சிவானந்தா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கூட்ட நெரிசலாலும், வெயிலின்…
டெல்லி : டெல்லியின் வசந்த் விஹார் பகுதியில் கடந்த ஜூலை 9 தேதி அன்று அதிகாலை 1:45 மணியளவில் ஒரு…
டெல்லி : குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மாநிலங்களவையின் (ராஜ்யசபா) நியமன உறுப்பினர்களாக நான்கு பிரபலமான நபர்களை நியமித்துள்ளார். இந்த…
சென்னை : திருவள்ளூர் அருகே டீசல் டேங்கர் ரயிலில் ஏற்பட்ட தீ 5 மணி நேரமாக எரிந்து வரும் நிலையில்,…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த 24 குடும்பத்தினருக்கு நீதி கேட்டு சென்னையில் தவெக #TNDemands…