இந்த முறை துவக்கத்தில் களமிறங்கும் ஹிட் மேன்..!

அனைத்து ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கும் 13 வது சீசன் ஐபிஎல் தொடர் இன்று இரவு 7.30க்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. இந்நிலையில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி மோதவுள்ளது. மேலும் முதல் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி மிகவும் கடினமாக பயிற்சி செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் மும்பை அணியில் தொடக்க வீரராக யார் இரங்குவார் என்று பயிற்சியாளர் ஜெயவர்தனே சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் அதில் பேசிய அவர் இந்த வருடம் மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா மற்றும் குவின்டன் டி காக் தான் இறங்குவார்கள் என்று கூறியுள்ளார்.