மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் நிச்சயம் பங்கேற்பேன் -ஸ்ரேயாஸ் ஐயர்..!!

மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் நிச்சயம் பங்கேற்பேன் என்று ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 3 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றது. இந்த தொடரின் முதல் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர்க்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் அவருக்கு அறுவைசிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது, இதன் காரணமாக அவர் ஒருநாள் தொடரில் விலகினார். மேலும் சமீபத்தில் ஒத்திவைக்கப்பட்ட 14வது ஐபிஎல் சீசனிலும் அவர் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் ரிஷாப் பன்ட் கேப்டனாக செயல்பட்டார்.
மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் வருகின்ற செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் நிச்சயம் பங்கேற்பேன் என தெரிவித்துள்ளார். இது குறித்து ஊடகத்திற்கு பேட்டியளித்த அவர் கூறியது ” நான் தோள்பட்டை காயத்தில் இருந்து விரைவாக மீண்டு வருவதால், மீதமுள்ள ஐ.பி.எல். தொடருக்கான போட்டிகளில் கண்டிப்பாக விளையாடுவேன் கேப்டனாக செயல்படுவது குறித்து எங்கள் டெல்லி அணி நிர்வாகம் தான் முடிவு செய்யும். என் இலக்கு எங்கள் டெல்லி அணிக்கு கோப்பை வென்று தருவது தான். இதுவரை நடந்து முடிந்த போட்டிகளில் புள்ளிபட்டியலில் முதலிடத்தில் டெல்லி அணி தான் உள்ளது. இதனை தக்கவைத்துக் கொள்ள வேண்டும். சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்லவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
கங்கைகொண்ட சோழீஸ்வரரை தரிசனம் செய்த பிரதமர் மோடி.!
July 27, 2025
வழிநெடுக தூவப்பட்ட மலர்கள்.., சோழபுரத்தில் மோடி சாலைவலம்..! பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.!
July 27, 2025
மேட்டூர் அணையில் அதிகரிக்கும் நீர்வரத்து : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடி.!
July 27, 2025