ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக கில்லை தான் எடுப்பேன்! முன்னாள் இங்கிலாந்து வீரர் கருத்து!!

Morgan, Formar England Captain

இயான் மோர்கன் : டி20 உலகக்கோப்பை இந்திய அணியை குறித்து பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான இயான் மோர்கனும் அவரது கருத்தை கூறி இருக்கிறார்.

நடப்பாண்டு டி20 உலகக்கோப்பைக்கு இந்திய அணியின் வீரர்கள் அமெரிக்கா சென்று அங்கு பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்திய அணியில் சுப்மன் கில் ரிசர்வ் வீரராக இந்தியா அணியில் இடம்பெற்றுள்ளார். ஆனால் அவர் 15 பேர் கொண்ட அணியில் இடம்பெறவில்லை.

இதனை குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான இயான் மோர்கன் ஸ்கை ஸ்போர்ட்ஸ்க்கு அளித்த தற்போதைய பேட்டி ஒன்றில் கூறுகையில், “எனது ஒரே முடிவு, அதுவும் சற்று உங்களுக்கு வித்தியாசமாக இருக்கலாம், நான் இந்திய அணியைத் தேர்வு செய்தால், யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்குப் பதிலாக ஷுப்மான் கில்லைத் தான் தேர்ந்தெடுப்பேன்.

நான் அவருடன் ஐபிஎல்லில் விளையாடியிருக்கிறேன், அவர் எப்படி சிந்திக்கிறார், அவர் எப்படி செயல்படுவார் என்பது எனக்கு நன்றாக தெரியும். அவர் தான் அந்த இந்திய அணியின் எதிர்கால கேப்டன் என்று நான் நினைக்கிறேன். இது போன்ற தலைமை பண்பு கொண்ட சிறந்த வீரர்களை உங்கள் அணியில் எப்போதுமே வைத்திருக்க வேண்டும்.

அவர்கள் பெரிய போட்டிகளின் போதும், சில அழுத்தமான சூழ்நிலைகளின் போதும் உங்கள் அணிக்கு கை கொடுப்பார்கள். அதே போல அவர்களை பிளேயிங் லெவனில் ஆட வைக்காமல் வெளியே அமர வைத்தாலும் அவர் அணியில் இடம் பெற்று இருப்பது மற்ற வீரர்களுக்கு ஒரு ஊக்குவிப்பாக இருக்கும்”, என்று கூறி இருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்