இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டி இன்று நடைபெறுகிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி முதல் போட்டியில் இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது டி20 போட்டி திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்ஃபீல்ட் சர்வதேச மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
பேட்டிங்கில் கேப்டன் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ரிங்கு சிங், ஜெய்ஸ்வால் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர். இந்த போட்டியிலும் இந்த மூவரிடமும் இதேபோன்ற ஆட்டத்தை இந்தியா எதிர்பார்க்கும். முதல் போட்டியில் ரன் அவுட் ஆன ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா ஆகியோரும் நல்ல இன்னிங்ஸ் விளையாட முயற்சி செய்வார்கள். இரண்டாவதுபோட்டியிலும் ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் என கூறப்படுகிறது.
ஆஸ்திரேலிய அணியைப் பற்றி பேசுகையில், முதல் போட்டியில் ஜோஷ் இங்கிலிஸ் சதம் விளாசினார். அதேசமயம் ஓப்பனிங் செய்ய வந்த அனுபவமிக்க பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் அரைசதம் விளாசினார். இருப்பினும், ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சிலும் மோசமான நிலையில் இருந்தனர். ஜேசன் பெஹ்ரண்டோர்ஃப் தவிர வேறு யாரும் சிறப்பாக பந்து வீசவில்லை.
வாஷிங்டன் சுந்தர் களமிறங்க வாய்ப்பு..?
ரவி பிஷ்னோய் மற்றும் அக்ஷர் படேல் முதல் போட்டியில் சிறப்பாக பந்து வீசினர். இதனால் இன்றைய போட்டியில் சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தரை விளையாடும்-11 இல் இந்தியா கொண்டு வரலாம். இருப்பினும், ஒரு போட்டிக்குப் பிறகு விளையாடும்-11 ஐ மாற்றியமைப்பது சரியாக இருக்காது எனக் கூறப்படுகிறது. மறுபுறம், ஆஸ்திரேலியா அணியில் தன்வீர் சங்காவுக்குப் பதிலாக அனுபவம் வாய்ந்த லெக் ஸ்பின்னர் ஆடம் ஜம்பாவை ஆஸ்திரேலியா களமிறக்கலாம்.
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…