கொரோனா காரணமாக தென் ஆப்பிரிக்காவுடனான அடுத்த இரண்டு ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்க அணியானது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
கடந்த 12 ஆம் தேதி முதல் ஒருநாள் போட்டியானது இமாச்சலபிரதேச மாநிலத்தில் உள்ள தர்மசாலாவில் பகல்-இரவு போட்டியாக நடைபெற இருந்தது. ஆனால் போட்டி துவங்குவதற்கு முன் மழை குறுக்கிட்டது.இதன் காரணமாக மைதானத்தில் ஈரப்பதம் இருந்தது.இந்நிலையில் முதல் ஒருநாள் போட்டி ஒரு பந்துகூட வீசப்படமால் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக கடைசி 2 ஒருநாள் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.15-ஆம் தேதி லக்னோவிலும்,18-ஆம் தேதி கொல்கத்தாவில் 2-வது மற்றும் 3-வது போட்டி நடைபெற இருந்த நிலையில் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…