நேற்றைய போட்டியில் இங்கிலாந்து அணியும் ,இந்திய அணியும் மோதியது .இப்போட்டி பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது .இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் பேட்டிங்கை தேர்வு செய்தார் .
முதலில் களமிறங்கிய இங்கிலாந்து 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 337 ரன்கள் குவித்தது. பின்னர் இறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 306 ரன்கள் எடுத்து 31ரன் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது.
இப்போட்டியில் இந்திய அணியின் வேக பந்து வீச்சாளர் முகமது ஷமி 10 ஓவர் வீசி ஒரு ஓவர் மெய்டன் செய்து 69 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டையும் பறித்தார்.இதன் மூலம் உலகக் கோப்பையில் இந்திய பந்து வீச்சாளர்களில் 5 விக்கெட்டை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் முகமது ஷமி இடம் பிடித்து உள்ளார்.
இதற்கு முன் 2011-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் யுவராஜ் சிங் 5 விக்கெட்டை வீழ்த்தி இருந்தார்.அதன் பிறகு தற்போது நடப்பு உலகக்கோப்பையில் முகமது ஷமி 5 விக்கெட்டை வீழ்த்தி இப்பட்டியலில் இடம் பிடித்தார்.
கபில் தேவ் (1983)
வெங்கடேஷ் பிரசாத் (1999)
ராபின் சிங் (1999)
ஆஷிஷ்நெஹ்ரா (2003)
யுவராஜ் சிங் (2011)
முகமது ஷமி (2019)
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…