INDvNZ : கோப்பை இந்தியாவுக்கு தான் ஆனா….நியூசிலாந்து பற்றி பயந்து பேசிய ரவி சாஸ்திரி!

நியூசிலாந்து அணி இறுதிப்போட்டியில் இந்தியாவுக்கு பெரிய சவாலை ஏற்படுத்தும் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

ravi shastri about ind vs nz

துபாய் : இந்திய கிரிக்கெட் அணி நாளை துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. இதற்கு முன்பு, இந்த இரண்டு அணிகளும் 2000-ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் மோதியிருந்தது. அந்த போட்டியில், நியூசிலாந்து அணி தான் அசத்தல் வெற்றியை பதிவு செய்து கோப்பையை வென்றது.

எனவே, 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்த இரண்டு அணிகளும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் மோதுகிறது என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளது. இந்த சூழலில் போட்டி குறித்து அந்த வீரர் திருப்பு முனையாக இருப்பார்..இந்த வீரர் திருப்பு முனையாக இருப்பார் என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பேசி வருகிறார்கள். அந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசியிருக்கிறார்.

இது குறித்து பேசிய அவர் ” போட்டியில் இந்திய அணி வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. ஆனால், அதே சமயம் நியூசிலாந்து அணி பெரிய அளவில் சவாலை கொடுக்கலாம். என்னைப்பொறுத்தவரை இந்தியாவை வீழ்த்தும் அளவுக்கு அவர்களிடம் திறமை இருக்கிறது. எனவே, போட்டி ஒரு பக்கம் இருக்காது சவாலாக இருக்கும்.

இரு அணிகளும் முன்பு லீக் சுற்றில் எதிரே மோதியபோது, நியூசிலாந்து இந்தியாவுக்கு கடுமையான சவாலாக அமைந்தது என்பதை அந்த போட்டியிலே நாம் பார்த்துவிட்டோம். எனவே, கொஞ்சம் கவனமாக இந்தியா விளையாடவேண்டும்” எனவும் அவர் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து இரண்டு அணிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வீரர்கள் பற்றி தேர்வு செய்து பேசினார்.

இது பற்றி பேசிய அவர் ” இந்தியாவிலிருந்து நான் அக்சர் பட்டேல் அல்லது ரவீந்திர ஜடேஜா ஆகியோரை தேர்வு செய்வேன். அதைப்போல, நியூசிலாந்திலிருந்து அணியில் கிளென் பிலிப்ஸை தேர்வு செய்வேன். ஏனென்றால், இவர்கள் இந்த தொடரில் மிகவும் சிறப்பாக விளையாடி இருக்கிறார்கள். அதைப்போலவே இறுதிப்போட்டியில் விளையாடுவார்கள் என நினைக்கிறேன்.

அதைப்போல, விராட் கோலி, கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா ஆகியோரும் சரியான பார்மில் இருக்கிறார்கள். எனவே, அவர்களும் இறுதிப்போட்டியில் அதிரடியாக விளையாடுவார்கள் என நினைக்கிறேன். துபாய் மைதானம் இதுவரை நடந்த போட்டிகளில் ஸ்பின்னர்களுக்கு உதவியது. எனவே, இறுதிப்போட்டியில் ஸ்பின்னர்களுக்கு விக்கெட் அதிகமாக கிடைக்கலாம். அதைப்போல,  இறுதிப்போட்டியில் பேட்டிங் பிச்சாக இருந்ததால், 300 ரன்கள் வரை அடிக்கலாம்” எனவும் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Harry Brook and Jamie Smith partnership
student -10th mark
tvk manimaran
Harry Brook - Jamie Smith
vijay - chennai hc
Dog Bite Rabies