இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் ஐபிஎல் தொடர் பாதுகாப்புடன், விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்று நடைபெறவுள்ள 23 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த இரண்டு அணிகளும் இதுவரை 14 போட்டிகள் நேருக்கு நேராக மோதியதில் 10 முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், 4 முறை ஹைதராபாத் அணியும் வெற்றி பெற்றுள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணி 5 போட்டிகள் விளையாடி 4 போட்டியில் வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் 2 வது இடத்திலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 5 போட்டிகள் விளையாடி 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் 8 வது இடத்தில் உள்ளது.
சென்னை அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் மோதியது, இதில் டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியை தொடர்ந்து 4 போட்டியில் சென்னை அணி மிகவும் சிறப்பாக விளையாடி 4 போட்டியிலும் வெற்றி பெற்றது. அதைபோல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 5 போட்டிகள் விளையாடித்தில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று 4 போட்டியிலும் தோல்வியடைந்துள்ளது, இதனால் இன்று நடைபெறும் இந்த போட்டி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு முக்கியமான போட்டி.
மேலும் இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றால் புள்ளிபட்டியலில் முதலிடத்தில் இருக்கும் பெங்களூர் அணியை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துவிடும் என்று கூறப்படுகிறது. நேற்று சென்னை அணி தான் புள்ளிபட்டியலில் முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
சென்னை : நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…
கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம்…
பெங்களூர் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போர் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக தேதி கூட அறிவிக்கப்படாமல் முன்னதாக…
மேற்காசியா : இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து நாட்டுக்கு…