இது நியாயமா? விராட் கோலி மற்றும் ரவி சாஸ்திரியை கடுமையாக சாடிய அனில் கும்ப்ளே.!

KumbleSlams Kohli Shastri

2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் இருந்து அம்பத்தி ராயுடுவை நீக்கியது மிகப்பெரிய தவறு என அனில் கும்ப்ளே கருத்து.

இங்கிலாந்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் அம்பத்தி ராயுடுவை, இந்திய அணியில் இருந்து நீக்கியது மிகப்பெரிய தவறு என அணில் கும்ப்ளே, அப்போதைய கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை விமர்சித்துள்ளார். இந்திய அணியில் அதிர்ஷ்டமில்லாத வீரர் என்றால் ஒருவகையில் அது அம்பத்தி ராயுடு என்றே கூறலாம்.

என்னதான் சிறப்பாக விளையாடினாலும் அணியில் நிரந்தர இடம் கிடைக்காமல் தவித்து வந்தார். இந்த நிலையில் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் இருந்து (ஐபிஎல் உட்பட) ஓய்வு பெறப்போவதாக கடந்த சில தினங்களுக்கு(ஐபிஎல் இறுதிபோட்டியோடு) முன் ராயுடு அறிவித்திருந்தார். ஆறுமுறை ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற லெஜன்டாக அம்பத்தி ராயுடு தனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஓய்வு முடிவை அறிவித்தார்.

ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் சிஎஸ்கேவின் வெற்றியில் அவரின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. கடந்த 2013இல் ஐபிஎல்லில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம், ஜிம்பாப்வேக்கு எதிராக அந்தவருடம் இந்திய கிரிக்கெட் அணிக்காக ராயுடு முதன்முறையாக அறிமுகமானார். 2015 உலகக் கோப்பை அணியிலும் இடம்பெற்றிருந்த ராயுடுவிற்கு, விளையாடும் வாய்ப்பு கிடைக்க வில்லை.

அதன்பிறகு 2018 இல் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பினார். ஆனால் 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் மீண்டும் தேர்வுக்குழுவினரால் புறக்கணிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக அணியில் இடம்பிடித்த விஜய் சங்கர் தேர்விற்கு, முன்னாள் தலைமை தேர்வாளர் எம்.எஸ்.கே விஜய் ஒரு ‘3D பிளேயர்’ என்று கருத்து தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து ராயுடு சர்ச்சைக்குரிய ட்வீட் ஒன்றையும் வெளியிட்டிருந்தார், (2019) உலகக் கோப்பையைப் பார்க்க புதிய 3டி கண்ணாடிகளை ஆர்டர் செய்தேன் என பதிவிட்டிருந்தார். இந்தியாவுக்காக 55 ஒருநாள் மற்றும் 6 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ள ராயுடுவுக்கு, துரதிர்ஷ்டவசமாக இந்திய ஆடும் லெவன் அணியில் மீண்டும் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.

தனது வாழ்க்கை முழுவதும் ராயுடு அணியில் பயன்படுத்தப்படாத வீரராகவே இருந்தார். இது குறித்து ஜியோ சினிமாவில் பேசிய அனில் கும்ப்ளே கூறியதாவது, 2019 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ராயுடுவை சேர்க்காதது தவறு, இதில் அப்போதைய கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கும் மிகப்பெரும் பங்கு உள்ளது என கடுமையாக விமர்சித்துள்ளார்.

ராயுடு நிச்சயம் 2019 உலகக் கோப்பையில் விளையாடியிருக்க வேண்டும். ஆம், இதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் விளையாடாதது பெரிய தவறு, அவரை அணியில் நடுவரிசை ரோலுக்காக நீண்டகாலம் தயார் செய்தீர்கள். ஆனால் திடீரென்று அவரது பெயர் அணியிலிருந்து நீக்கப்பட்டது ஆச்சர்யமாக இருந்தது என்று அனில் கும்ப்ளே கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்