#BREAKING : கடத்தல்காரர்களால் கடலில் வீசப்பட்ட தங்கம் மீட்பு…!

gold

கடத்தல்காரர்களால் கடலில் வீசப்பட்ட தங்கத்தை மீட்ட இந்திய கடற்படையினர்.

இலங்கையிலிருந்து படகு மூலம் தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் கடலோரக் காவல்படை படகில் நேற்று முன்தினம் ரோந்து சென்ற நிலையில், மண்டபம் எதிரே மன்னார் வளைகுடா பகுதி மணலி தீவு அருகே ரோந்து படகை பார்த்ததும் பதிவு எண் இல்லாத பைபர் படகில் இருந்த 3 பேர் படகை நிறுத்தாமல் சென்றனர்.

அதிகாரிகளை பார்த்தவுடன் அவர்கள் தங்கத்தை கடலில் தூக்கி வீசியதாக கூறப்பட்ட நிலையில், இது தொடர்பாக அதிகாரிகள் நீச்சல் தெரிந்தவர்களை வைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 2-வது நாளாக தேடுதல் பணியில் ஈடுபட்ட நிலையில், 10 கிலோ தங்கம் இருந்த பார்சலை இந்திய கடற்படையினர் மீட்டெடுத்துள்ளனர்.

பாதுகாப்பு அதிகாரிகளின் சோதனைக்கு பிறகு தங்கத்தின் மதிப்பு குறித்த தகவல் வெளியாகும் என கூறப்படுகிறது. மீட்கப்பட்ட பார்சல் மண்டபம் இந்திய கடலோர காவல் படை முகாமிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.10 கோடி மதிப்புள்ள தங்கம் ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்