கேப்டனாக விராட் கோலி சாதிக்கவில்லை.. இளம் வீரர் பேட்டி.!

Published by
பால முருகன்

விராட் கோலி, ரோஹித் சர்மா, தோனி சிறந்த ஐபிஎல் கேப்டன் யார் என்ற கேள்விக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் ஆல்ரவுண்டர் கிருஷ்ணப்பா கௌதம் பதிலளித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் பரவி மிரட்டி வருகிறது. இதையடுத்து, கொரோனாவை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால்,பள்ளி கல்லூரிகள், பொது இடங்களில், வணிக வளாகங்கள், விளையாட்டு மைதானங்கள் அனைத்தும் மூடப்பட்டன.

இதனால், இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் நடைபெற இருந்த ஐபிஎல் போட்டி கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைப்பதாக பிசிசிஐ அறிவித்தது. இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றம் தந்தது. இதனை தொடர்ந்து ஐபிஎல் போட்டி நடைபெறுமா அல்லது நடைபெறாத என்ற கேள்வி ரசிகர்களுக்கு மத்தியில் எழும்பியுள்ளது.

இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் சிறந்த கேப்டன் யார் என்ற கேள்விக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் கிரிக்கெட் வீரர் கிருஷ்ணப்பா கௌதம் பதிலளித்துள்ளார், அவர்கூறியது ” மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் இரண்டுமே ஐபிஎல் போட்டியில் மிகவும் சிறந்த அணி” சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 முறை ஐபிஎல் போட்டியில் வெற்றிபெற்றுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி 4 முறை வெற்றி பெற்றுள்ளது”. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி தான் சிறந்த அணி என்றும் கூறியுள்ளார்.

அடுத்ததாக அவரிடம் விராட் கோலி, ரோஹித் சர்மா, தோனி மூவரில் யார் சிறந்த கேப்டன் என்ற கேள்வி கேட்டகப்பட்டது, அதற்கு அவர் ” தோனி வெற்றிகரமான சிறந்த கேப்டன் ரோஹித் சர்மாவும் சிறந்த கேப்டனாக திகழ்கிறார், ஏனெனில் மிகவும் நெருக்கடியான சூழல்களை தோனியை போலவே அமைதியாக இருந்து நிதானமாக அனைத்தையும் எதிர்கொள்பவர் ரோஹித் சர்மா.

ஆனால் விராட் கோலி இவர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டவர். விராட் கோலி மிகவும் கோபம் உடையவர், அவர் ஐபிஎல் போட்டியில் அதிகம் ரன்கள் குவித்தாலும் அவருடைய தலைமையில் உள்ள ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணி ஒரு தடவைகூட கோப்பை அடித்ததில்லை, மேலும் ஐபிஎல் போட்டியில் கேப்டனாக விராட் கோலி சாதிக்கவில்லை என்பதே, கோலியின் கேப்டன்சி மீதான விமர்சனத்துக்கு,வழிவகுக் கிறது என்று வெளிப்படையாக கிருஷ்ணப்பா கௌதம்  கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

திருவள்ளூர் ரயில் விபத்து: ரயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.!

திருவள்ளூர் ரயில் விபத்து: ரயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.!

சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…

9 hours ago

2 ஆவது விக்கெட்டை வீழ்த்தி சிராஜ் அசத்தல்! இங்கிலாந்து அணி கதறல்!

லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…

9 hours ago

இயக்குநர் பா.ரஞ்சித் படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழப்பு.!

சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…

10 hours ago

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!

சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…

10 hours ago

புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் தற்கொலை.! நடந்தது என்ன.?

உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

11 hours ago

பாலியல் வன்கொடுமை.., பொதுவெளியில் தண்டனை அளித்த ஈரான் அரசு.!

புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…

11 hours ago