ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் சரிந்த கோலி, முன்னேறிய பும்ரா ..!

டெஸ்ட் தரவரிசை பட்டியலில் விராட் 5-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
இன்று ஐசிசி சமீபத்திய டெஸ்ட் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான நாட்டிங்ஹாம்மில் நடைபெற்ற முதல் டெஸ்டில் முதல் பந்தில் ஆட்டமிழந்த இந்திய கேப்டன் விராட் கோலி, பேட்ஸ்மேன்களின் டெஸ்ட் தரவரிசை பட்டியலில் சரிவை சந்தித்துள்ளார். ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசிய முதல் பந்திலேயே வெளியேற்றப்பட்ட விராட், தரவரிசை பட்டியலில் மேலும் ஒரு இடம் கீழே இறங்கியுள்ளார்.
இப்போது விராட் கோலியின் டெஸ்ட் தரவரிசை 5 வது இடத்தில் உள்ளது. ஆனால் மறுபுறம், நாட்டிங்ஹாமில் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளையும் மொத்தம் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 10 இடங்கள் முன்னேறி 9 வது இடத்திற்கு முன்னேறினார்.
முன்னதாக செப்டம்பர் 2019 இல், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பும்ரா தரவரிசை பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்தார். அப்போது பும்ரா 110 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இங்கிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டன் விராட் கோலி ஒரு இன்னிங்ஸ் மட்டுமே விளையாட முடிந்தது. போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடவதற்குள் மழையால் போட்டி டிராவில் முடிந்தது.
மறுபுறம், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் முதல் டெஸ்ட் போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் இன்னிங்சில் 64 ரன்னும், இரண்டாவது இன்னிங்சில் 109 ரன்னும் எடுத்தார். அவர் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார். இதனால், டெஸ்ட் தரவரிசையில் நான்காவது இடத்திற்கு ஜோ ரூட் வந்துள்ளார்.
இந்திய தொடக்க வீரர் ரோகித் சர்மா மற்றும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் முறையே ஆறாவது மற்றும் 7 வது இடத்தில் தொடர்ந்து உள்ளனர். ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா பேட்டிங் பட்டியலில் மூன்று இடங்கள் முன்னேறி 36 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதே நேரத்தில் கே.எல் ராகுல் முதல் இன்னிங்சில் 84, இரண்டாவது இன்னிங்சில் 26 ரன்கள் எடுத்ததால் 56 வது இடத்திற்கு சென்றார்.
↗️ Jasprit Bumrah is back in the top 10
↗️ James Anderson, Joe Root move upPlayers from England and India make gains in the latest @MRFWorldwide ICC Men’s Test Rankings.
Full list: https://t.co/OMjjVx5Mgf pic.twitter.com/z2icdZFYpe
— ICC (@ICC) August 11, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025