Heinrich Klaasen And Virat Kohli [Image source : file image ]
முதல்முறையாக ஒரே ஐபிஎல் போட்டியில் இரண்டு அணி வீரர்கள் சதம் அடித்துள்ளனர்.
16-வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் பிளே ஆப் சுற்று தொடங்கப்படவுள்ளது. எனவே, பிளே ஆப் சுற்றுக்குள் செல்ல வேண்டும் என்ற நோக்கில் புள்ளி விவர பட்டியலில் இருக்கும் முதல் 6 அணிகள் நடைபெறும் போட்டியில் அனைத்திலும் வெற்றிபெற்று பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய வேண்டும் என்ற நோக்கில் விளையாடி வருகிறது.
அந்த வகையில், நேற்று (வியாழன்) நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், ஹைதராபாத் அணியும் மோதியது. இந்த போட்டியில் பெங்களூர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று புள்ளி விவரப்பட்டியலில் 4-வது இடத்திற்கு முன்னேறியது. மேலும், இந்த போட்டியில் இரு அணி தரப்பு வீரர்களும் சதம் அடித்து சாதனை படைத்துள்ளனர்.
நேற்று நடந்த இந்த போட்டியில் ஹைதராபாத் அணி வீரர் ஹென்ரிச் கிளாசென் அதிரடியாக விளையாடி 51 பந்துகளில் 104 ரன்கள் எடுத்தார். அதைப்போல பெங்களூர் தொடக்க ஆட்டக்காரர் விராட் கோலி 63 பந்துகளில் 100 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் இரு அணி வீரர்களும் முதல்முறையாக ஒரே ஐபிஎல் போட்டியில் சதம் அடித்த வீரர்கள் என்ற சாதனையை படைத்துள்ளனர்.
மேலும், நேற்று சதம் அடித்ததன் மூலம் விராட் கோலி ஐபிஎல் தொடரில் அதிக சதம் (6) அடித்தவர் என்ற கிறிஸ் கெயிலின் சாதனையை சமன் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…