நடுக்கடலில் சகவீரர்கள், மனைவி உடன் வெற்றியை கொண்டாடிய கோலி..!

இந்திய அணி , வெஸ்ட் இண்டீஸில் சுற்று பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இதன் மூலம் தோனியின் சாதனையை கோலி சமன் செய்தார்.
இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் தொடங்கஉள்ளது.இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் கோலி சகவீரர்கள் மற்றும் மனைவி உடன் முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக அங்கு உள்ள கடலில் உற்சாகமாக பயணம் செய்து கொண்டாடினர்.
நடுக்கடலில் விராட் கோலி, கே.எல்.ராகுல், அஸ்வின், மயங்க் அகர்வால் மற்றும் கோலி மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோர் உற்சாகமாக எடுத்து கொண்ட புகைப்படத்தை கே.எல்.ராகுல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025