ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள 22-வது போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவலுக்கு மத்தியில் ஐபிஎல் தொடர் பாதுகாப்புடன், விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெறும் 22-வது போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளது. அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்த போட்டி நடைபெறவுள்ளது.
நேருக்கு நேர்:
இவ்விரு அணிகளும் இதுவரை 25 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் டெல்லி அணி 10 போட்டிகளிலும், பெங்களூர் அணி 15 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளது. மேலும் பெங்களூர் அணி ஒருமுறை கூட கோப்பையை கைப்பற்றாத நிலையில், இந்த தொடரில் சிறப்பாக ஆடிவந்தது.
அணிகள்:
தொடர் வெற்றிகளை குவித்து, வெற்றிநடை போட்ட பெங்களூர் அணியை சென்னை அணி “பிரேக்” போட்டு நிறுத்தியது. இதனால் சென்னை அணிக்கு எதிரான கடந்த போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்தது. அதேபோல டெல்லி அணி, நேற்று முன்தினம் நடந்த போட்டியில் சூப்பர் ஓவர் வரை சென்று தனது வெற்றியை பதிவு செய்துள்ளது. இரு அணிகளும் பயங்கர பார்மில் இருக்கும் நிலையில், இன்றைய போட்டியில் இரு அணிகளும் அதிகப்படியான ரன்களை குவிக்கும் என்றும், இன்றைய போட்டியில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி, டெல்லி அணியில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் இல்லாதது அந்த அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதேபோல பெங்களூர் அணியில் இருந்து ஆடம் ஜம்பா மற்றும் கேன் ரிச்சர்டுசன், சில தனிப்பட்ட காரணங்கள் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார்கள்.
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…