#IPL2022: பழிவாங்குமா மும்பை இந்தியன்ஸ்? சென்னை அணியுடன் இன்று மோதல்!

Published by
Surya

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள 58-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்த போட்டி, மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது.

ஐபிஎல் தொடர் தற்பொழுது பாதி கட்டத்தை கடந்துள்ள நிலையில், தற்பொழுது பிளே ஆப்ஸ் சுற்றுக்கு தகுதிபெற அனைத்து அணிகளும் தீவிரமாக விளையாடி வருகிறது. அந்தவகையில் இன்று நடைபெறும் 58-வது போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் இந்த போட்டி தொடங்கவுள்ளது.

ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் 33 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் மும்பை இந்தியன்ஸ் அணி 19 போட்டிகளிலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. மேலும், நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் 11 போட்டிகளில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி, 2 போட்டிகளில் வெற்றிபெற்று பிளே ஆப்ஸ் வாய்ப்பை இழந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.  அதேபோல சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 11 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றிபெற்று 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 9-ம் இடத்தில் உள்ளது.

அடுத்த வரவுள்ள போட்டிகளில் 14 புள்ளிகள் பெறவேண்டிய கட்டாயத்தில் சென்னை அணி உள்ளது. பிளே ஆப்ஸ் சுற்றுக்குள் நுழைய கடினம் என்றாலும் அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றால் சென்னை அணி தகுதிபெற ஒரு வாய்ப்புகள் உள்ளது. இதனால் இன்றைய போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மேலும், சென்னை அணிக்கு எதிரான நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அதற்கு ஈடாக இன்றைய போட்டியில் வெற்றிபெறும் என்று பெரிதளவில் எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் XI:

சென்னை சூப்பர் கிங்ஸ்:

ருத்ராஜ் கெய்க்வாட், டெவன் கான்வே, ராபின் உத்தப்பா, அம்பதி ராயுடு, சிவம் துபே, மொயீன் அலி, தோனி (கேப்டன் / விக்கெட் கீப்பர்), டுவைன் பிரிட்டோரியஸ், சிமர்ஜீத் சிங், மகேஷ் தீக்ஷனா, முகேஷ் சௌத்ரி

மும்பை இந்தியன்ஸ்:

ரோஹித் சர்மா (கேப்டன்) , இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, ரமன்தீப் சிங் /அன்மோல்ப்ரீத் சிங், கைரன் பொல்லார்டு, டிம் டேவிட், டேனியல் சாம்ஸ், குமார் கார்த்திகேயா, முருகன் அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா, ரிலே மெரிடித்

Published by
Surya

Recent Posts

சாலை விபத்தில் காயம் ஏற்பட்டால் இலவச சிகிச்சை! மத்திய அரசு அறிவிப்பு!

சாலை விபத்தில் காயம் ஏற்பட்டால் இலவச சிகிச்சை! மத்திய அரசு அறிவிப்பு!

டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…

25 minutes ago

பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை! 3 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண்!

மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…

1 hour ago

சந்தர்ப்பவாதிகளாலும், துரோகிகளாலும் திமுகவை வீழ்த்த முடியாது! மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…

2 hours ago

பாகிஸ்தானுக்கு சிந்து நதி தண்ணீர் நிறுத்தம்? புதிதாக 6 அணைகள் கட்ட அரசு திட்டம்!

டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…

3 hours ago

Live : சென்னை ED ரெய்டு முதல்.. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரை…

சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு,  தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…

5 hours ago

வான்வெளி தாக்குதல்., சைரன் ஒலி., பதுங்கு குழிகள்! நாளை நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…

5 hours ago