“இந்தியா VS சவுத்ஆப்பிரிக்கா: சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ரன்கள் எடுத்து மிதாலி ராஜ்புதிய சாதனை!…

Published by
Edison

மிதாலி ராஜ் சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ரன்கள் எடுத்த முதல் இந்திய பெண் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். 

மிதாலி ராஜ்  இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன்,மேலும் டெஸ்ட் மற்றும் ODI போட்டிகளிலும் கேப்டனாக உள்ளார்.இவர் ஒரு வலதுகை பேட்ஸ்மேன். 1999ல் மிதாலி தனது 16 வயதில் சர்வதேச அளவில் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

இவர் ODI போட்டிகளில் 6974 ரன்கள் எடுத்துள்ளார், T20 போட்டிகளில்  மிதாலி 2,364 ரன்கள் எடுத்துள்ளார்.மிதாலி ராஜ் “இந்திய பெண்கள் கிரிக்கெட்டின் லேடி சச்சின்” என்ற பெயரில் செல்லமாக அழைக்கப்படுகிறார். இந்தியா vs சவுத்ஆப்பிரிக்கா பெண் கிரிக்கெட் வீரர்களுக்கு இடையிலான 3வது ஒருநாள்(ODI) கிரிக்கெட்போட்டி  லக்னோவில் அட்டல் பிஹாரி வாஜ்பாய் எகனா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்தியா 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தப் போட்டியில் மிதாலிராஜ் 50 பந்துகளுக்கு 36 ரன்கள் எடுத்ததனால் அவர் சர்வதேச போட்டிகளில் 10,000 ரன்கள் எடுத்த முதல் இந்திய பெண் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.இதன்மூலம் சர்வதேச போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது பெண்வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

இங்கிலாந்தின் சார்லோட் எட்வர்ட்ஸ்தான் 10273 ரன்களில் இந்த சாதனையை எட்டிய முதல் வீராங்கனை.சர்வதேச போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்து சாதனைபடைத்த மிதாலி ராஜை , “இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI)” வாழ்த்தியுள்ளது.

Published by
Edison

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

3 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

4 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

5 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

5 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

7 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

9 hours ago