mumbai indians [fileimage]
Mumbai Indians : ஐபிஎல் சீசனின் முதல் போட்டிகளில் அதிகமுறை தோல்வி அடைந்த அணி என்ற சாதனையை மும்பை இந்தியன்ஸ் படைத்துள்ளது.
நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் அஹமதாபாத்தில் நடைபெற்றது. இந்த சீசனில் மும்பை அணிக்கும் குஜராத் அணிக்கும் இந்த போட்டி தான் முதல் போட்டி. எனவே, இந்த முதல் போட்டியில் எந்த அணி வெற்றிபெறப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்தது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததது. முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்து. இதனால் 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்தது. 20 ஓவருக்கு 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் குஜராத் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மும்பை அணி ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் தோல்வி அடைவது ஒன்னும் புதிதான விஷயம் இல்லை. ஏனென்றால், கடந்த 12-ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் வெற்றிபெற்றதே இல்லை. 2013 முதல் தற்போது வரை முதல் போட்டி என்றாலே மும்பை அணி முதல் போட்டியில் வெல்ல திணறி வருகிறது.
கடைசியாக கடந்த 2012ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக மும்பை விளையாடியது. அந்த போட்டியில் தான் சென்னை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது. அந்த போட்டியை தொடர்ந்து கடந்த 12-ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணி முதல் போட்டியில் வெற்றிபெறவில்லை. இதன் மூலம் முதல் போட்டியில் அதிகமுறை தோல்வியை கண்ட அணி என்ற மோசமான சாதனையும் மும்பை படைத்துள்ளது.
சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…