#INDvENG: டி-20 தொடரில் தமிழக வீரர் நடராஜன், வருண் சக்கரவர்த்தி விளையாட வாய்ப்பு?

Published by
Surya

இங்கிலாந்து அணிக்கு எதிரான டி-20 போட்டியில் தமிழக வீரர்களான நடராஜன், வருண் சக்கரவர்த்தி விளையாட வாய்ப்புக்கள் கம்மி என கூறப்படுகிறது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை இந்திய அணி 3 – 1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த தொடரின் இறுதிப்போட்டி, வரும் 12 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதனைதொடர்ந்து டி-20 தொடர், வரும் 14 ஆம் தேதி முதல் அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கவுள்ளது.

இந்த டி-20 தொடரில் விளையாடவுள்ள வீரர்களின் பட்டியலை இரு அணிகள் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், இந்த டி-20 தொடரில் தமிழக வீரர்கள் நடராஜன், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் விளையாடுவதற்கான வாய்ப்புகள் குறைவு என கூறப்படுகிறது. நடராஜனுக்கு முழங்கால் மற்றும் தோள் பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளதால், முதல் போட்டிக்கு முன்பு அவர் காயத்தில் இருந்து மீழ்வது சந்தேகம் என கூறப்படுகிறது.

மேலும், சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி, உடல் தகுதி சோதனையில் தோல்வி அடைந்த காரணத்தினால் அவர் முழு உடல் தகுதி பெறவில்லை. காயம் காரணமாக ஆஸ்திரேலிய தொடரில் இருந்து வருண் சக்ரவர்த்தி விலகிய நிலையில், தற்போது மீண்டும் உடல் தகுதி இல்லாத காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அவர் விளையாட வாய்ப்புகள் கம்மி. அவருக்கு பதில் ராகுல் சாகர் இடம்பெற வாய்ப்பு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Published by
Surya

Recent Posts

திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் தீ விபத்து – உதவி எண்கள் அறிவிப்பு.!

திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் தீ விபத்து – உதவி எண்கள் அறிவிப்பு.!

சென்னை : திருவள்ளூர் அருகே டீசல் டேங்கர் ரயிலில் ஏற்பட்ட தீ 5 மணி நேரமாக எரிந்து வரும் நிலையில்,…

3 minutes ago

”வெற்று விளம்பர திமுக, இப்போ ‘Sorry மா’ மாடல் ஆட்சியாக மாறிவிட்டது” – கடுமையாகச் சாடிய விஜய்.!

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த 24 குடும்பத்தினருக்கு நீதி கேட்டு சென்னையில் தவெக #TNDemands…

32 minutes ago

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் உடல்நலக்குறைவால் காலமானார்.!

சென்னை : பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (83) உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 13) காலை காலமானார். உடல்…

50 minutes ago

விஜய் தலைமையில் போராட்டம்.. கூட்ட நெரிசலில் சிக்கி தவெக பெண் தொண்டர்கள் மயக்கம்.!

சென்னை : அஜித்குமார் மரணத்திற்கு நீதி கேட்டு சென்னை சிவானந்தா சாலையில் தவெக தலைவர் விஜய் தலைமையில் இன்னும் சற்றுநேரத்தில்…

1 hour ago

5 மணி நேரமாக தீப்பற்றி எரியும் சரக்கு ரயில்.., தற்போதைய நிலவரம் என்ன?

சென்னை :  திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே இன்று (ஜூலை 13) அதிகாலை 5:20 மணியளவில் சென்னை மணலியில் இருந்து…

2 hours ago

ஒவ்வொரு 80 ஓவர்களுக்கும் 3 முறை பந்து மாற்றனும்…ஜோ ரூட் சொன்ன யோசனை!

லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…

18 hours ago