இந்திய அணி சரவெடி பேட்டிங்.! நியூசிலாந்து அணிக்கு இமாலய இலக்கு.!

Published by
செந்தில்குமார்

IND vs NZ: 2023 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடர் போட்டியானது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில், இன்று முதலாவது அரையிறுதி போட்டி ஆனது நடைபெற்று வருகிறது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் ஒரு லீக் போட்டில் கூட தோற்காமல் அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி, நியூசிலாந்து அணியுடன் பலப்பரீட்சை நடத்தி வருகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவு செய்து களமிறங்கியது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் முதலில் களமிறங்கினார்கள். ஆரம்பம் முதலே ரோஹித் ஷர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சுப்மன் கில் நிதானமாக விளையாடினார்.

சரித்திர நாயகன்: ஒரே நாள், ஒரே ஆட்டம்.. 2 உலக சாதனைகளை நிகழ்த்திய விராட் கோலி!

பின்னர் ரோஹித் ஷர்மா 8.2-வது ஓவரில் டிம் சவுத்தி வீசிய பந்தில், வில்லியம்சனிடம் கேட்ச் கொடுத்து, 4 சிக்ஸர்கள் 4 பவுண்டரிகளுடன் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, நட்சத்திர வீரர் விராட் கோலி களமிறங்க, மறுபுறம் சிறப்பாக விளையாடி வந்த சுப்மன் கில் 79* ரன்கள் எடுத்து, திடீரென காலில் ஏற்பட்ட வலி காரணமாக Retired Hurt ஆகி பெவிலியன் திரும்பினார்.

இதன்பிறகு ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்க, விராட் கோலி அரை சதம் கடந்து அசத்தினார். இருவரும் தொடர்ந்து சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள். பின்னர் ஸ்ரேயாஸ் அய்யர் 36.2-வது ஓவரில் சான்ட்னர் வீசிய பந்தை அடித்ததன் மூலம் அரைசதம் அடித்தார். ஸ்ரேயாஸின் அரை சதத்தை ரசித்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் விதமாக, விராட் கோலி தனது 50ஆவது ஒருநாள் சதத்தை அடித்து மேலும் வியப்பில் ஆழ்த்தினார்.

இந்த 50-வது சதத்தின் மூலம் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி முறியடித்தார். விராட் கோலி தொடர்ந்து தானும் சதம் அடிப்பேன் என்று ஸ்ரேயாஸ் அய்யர் 67 பந்துகளில் அதிரடி காட்டி, தனது ஒருநாள் சதத்தை பதிவு செய்தார். இதையடுத்து கோலி 9 பௌண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடித்து 117 ரன்களில் தனது விக்கெட்டை இலக்க, கே.எல்.ராகுல் களமிறங்கி பொறுப்பாக விளையாடினார்.

ஸ்ரேயாஸ் ஐயர் களத்தை விட்டு வெளியேற, சூர்யகுமார் யாதவ் விளையாட வந்து 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார். பிறகு காயம் காரணமாக வெளியேறி இருந்த கில் களமிறங்கி, கே.எல்.ராகுலுடன் இணைந்து விளையாடினார். இந்த அரையிறுதிப் போட்டி இந்திய அணி வீரர்களுக்கு பல சாதனைகளைப் படைக்கவும், முறியடிக்கவும் வழிவகுத்தது. முடிவில் இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 397 ரன்கள் எடுத்தது.

அரையிறுதியில் அதிரடி பேட்டிங்.! ஒரே ஆட்டத்தில் பல சாதனைகளை படைத்த ரோஹித் ஷர்மா.!

இதில் அதிகபட்சமாக விராட் கோலி 117 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 105 ரன்களும், சுப்மன் கில் 80* ரன்களும், ரோஹித் ஷர்மா 47 ரன்களும், கே.எல்.ராகுல் 39* ரன்களும் குவித்துள்ளனர். நியூசிலாந்து அணியில் டிம் சவுத்தி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் நியூசிலாந்து அணி 398 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கில் பேட்டிங் செய்யக் களமிறங்கவுள்ளது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

சடசடவென திருமணத்திற்கு ரெடியாகும் விஷால்! பொண்ணு இந்த நடிகையா?

சென்னை : நடிகர் விஷால் எதாவது நிகழ்ச்சிக்கு சென்றாலே அவரிடம் அடுத்த என படம் நடிக்கிறீர்கள் என்று கேட்பதை விட உங்களுக்கு…

2 hours ago

பாமகவில் ராமதாஸுக்கு பின் அன்புமணி தான் – ஜி.கே.மணி திட்டவட்டம்!

சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல் நடைபெறுவதை…

3 hours ago

ஈரோடு இரட்டைக் கொலை வழக்கு : 4 பேர் கைது!

ஈரோடு : மாவட்டம், சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி உச்சிமேடு பகுதியில் நடந்த இரட்டைக் கொலை சம்பவம் பெரும் பரபரப்பை…

6 hours ago

குஜராத் அணி அசத்தல் வெற்றி! குதூகலத்தில் பெங்களூர், பஞ்சாப்!

டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது என்கிற எதிர்பார்ப்புகளும்…

7 hours ago

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது – சசிகலா சாடல்!

சென்னை : அஇஅதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா நேற்று (மே 18, 2025) தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற…

8 hours ago

பருவமழை முன்னெச்சரிக்கை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம்!

சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கு முன்னேற்பாடாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

8 hours ago