ஏற்கெனவே ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் உள்ள 12 அணிகளுடன் மேலும் 4 அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. ஸ்காட்லாந்து, யு.ஏ.இ.அணிகள் முறையே 13 மற்றும் 14ம் இடத்தில் நுழைக்கப்பட்டுள்ளன. நெதர்லாந்து, நேபாள் ஆகிய அணிகள் இன்னும் 4 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் ஆடிய பிறகு தரவரிசையில் சேர்க்கப்படுவார்கள். ஏனெனில் தரவரிசைப்பட்டியலில் இணைய குறைந்தது இவ்வளவு ஒருநாள் சர்வதேச போட்டிகள் ஆடியிருக்க வேண்டியது நிபந்தனையாகும். இந்த புதிய அணிகளின் சேர்க்கையினால் மேலே உள்ள 12 அணிகளின் தரவரிசை நிலைகளில் […]
நேற்று முன் தினம் மே.இ.தீவுகளுக்கும் ஐசிசி உலக லெவனுக்கும் இடையே நடைபெற்ற டி20 போட்டிக்கு சர்வதேச போட்டி அந்தஸ்து வழங்கப்பட்டதை கேள்விக்குட்படுத்தும் விதமாக நடந்த சம்பவம் ஒன்று ரசிகர்களின் ஆத்திரத்தைக் கிளப்பியுள்ளது. ஆட்டம் லைவ் ஆக நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது வர்ணனையாளர் நாசர் ஹுசைன் நடு மைதானத்தில் மைக்குடன் நின்று கொண்டிருந்தது அவ்வளவு நல்லதாகப் பார்க்கப்படவில்லை. சர்வதேச போட்டி என்றால் அதற்கான பொறுப்புடன் ஆடப்பட வேண்டும், ஆனால் வர்ணனையாளர் நடு ஆட்டத்தில் மைக்குடன் பீல்டர்களூக்கு அருகில் போய் […]
வேர்ல்டு லெவன் அணியை லண்டனில் நேற்று முன்தினம் ஒருதரப்பாக நடந்த டி20 கிரிக்கெட் போட்டியில் 72 ரன் வித்தியாசத்தில் மிக எளிமையாகத் தோற்கடித்தது மேற்கிந்தியத்தீவுகள் அணி. ஐசிசி வேர்ல்டு லெவன் என்று இந்த போட்டியில் மட்டுமல்ல, இதற்கு முன் நடந்த பெரும்பாலான போட்டிகளிலும் தேர்வு செய்யப்பட்ட வேர்ல்டு லெவன் அணியில் ஃபார்மில் இல்லாத வீரர்களையும் தேர்வு செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளது. இதனால் இதுபோன்ற கிரிக்கெட் போட்டியை பார்க்கும் ரசிகர்களுக்கு டி20 போட்டியின் சுவாரஸ்யத்தையே இழக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. […]
பாலிவுட் நடிகை நித்தி அகர்வாலுடன் இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் கொண்டுள்ள நட்பு குறித்து சமூகவலைத்தளங்கள் படங்களுடன் அலற, இது காதல்தான் என்று பலரும் தங்கள் கருத்துகளை வெளியிட்டுள்ள நிலையில் கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல், ஒரு ஆணும் பெண்ணும் நண்பர்களாகவே இருக்க முடியாதா? அது அவ்வளவு கடினமா? என்று அங்கலாய்த்துள்ளார். இது தொடர்பாக என்.டி.டிவியில் கே.எல்.ராகுல் கூறும்போது, “ஒரு ஆணும் பெண்ணும் நண்பர்களாக இருக்க முடியாதா? அது அவ்வளவு கடினமானதா? எனக்கு அவரை நீண்டகாலமாகத் தெரியும், நாங்கள் […]
திடீரென சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தென் ஆப்பிரிக்காவின், உலகின் தலைசிறந்த வீர்ர் ஏ.பி.டிவில்லியர்ஸ் ஓய்வு அறிவித்தது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இனி இப்படிப்பட்ட 360டிகிரி சுற்றி சுற்றி அடிக்கும் வீரரைக் காண்பது அரிது. இவரது பீல்டிங், அணுகுமுறை, விக்கெட் கீப்பிங் பொறுப்பையும் ஏற்ற பெருந்தன்மை ஆகியவை டிவில்லியர்ஸை நிகரற்ற ஒரு வீரராகவே கருதத் தோன்றுகிறது.இந்நிலையில் ஆலன் டொனால்ட் ஸ்கை ஸ்போர்ட்ஸில் கூறியதாவது: 6 மாதங்களுக்கு முன்பாகக்கூட ஏ.பி.டிவில்லியர்சிடம் பேசிக்கொண்டிருந்தேன், அப்போது கூட உலகக்கோப்பையில் ஆடியே தீருவேன் என்று பிடிவாதமாகவே […]
பி.சி.சி.ஐ. மற்றும் அதிகாரிகளுக்கு 2009-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் நடந்த முறைகேடுகளுக்காக அமலாக்கத்துறை ரூ.121 கோடி அபராதம் விதித்துள்ளது. இந்தியாவில் ஐபிஎல் தொடர் கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. பிசிசிஐ நடத்தும் இந்த போட்டிகளில் உலகின் பல நாடுகளை சேர்ந்த முன்னணி கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இதுதான் உலக அளவில் அதிக செலவில் நடத்தப்படும் லீக் தொடராகும். 2009-ம் ஆண்டு நடந்த இந்த தொடரின் 2-வது சீசன், நாடாளுமன்ற தேர்தல் காரணமாக தென்னாப்ரிக்காவில் […]
இந்திய வீரர் லெக் ஸ்பென்னர் கரண் சர்மா,2016-ம் ஆண்டில் இருந்து 2018-ம் ஆண்டுவரை ஐபிஎல் சாம்பியன் வென்ற வெவ்வேறு அணிகளில் இடம் பெற்ற ஒரே வீரர் ஆவார். ஐபிஎல் போட்டி தொடங்கப்பட்டதில் இருந்து ஒரே அணியில் இடம் பெற்ற வீரர்கள் சிலர் இருந்தாலும் அந்த அணி தொடர்ந்து மூன்று முறை பட்டம் வென்றதில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிமட்டுமே தொடர்ந்து 2 முறை பட்டம் வென்றுள்ளது. வேறு எந்த அணியும் தொடர்ந்து பட்டம் வெல்லவில்லை. ஆனால், சாம்பியன் […]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி ,சென்னைக்கு மீண்டும் ஐபிஎல் கோப்பையை பெற்றுத் தந்ததில் பெருமை அடைகிறோம் என்று கூறினார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 2 ஆண்டு தடைக்குப் பிறகு சிஎஸ்கே அணி களமிறங்கியது. லீக் சுற்று ஆட்டங்களில் சிறப்பாக ஆடிய சிஎஸ்கே 2-வது இடம் பிடித்து பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியது. பிளே-ஆப் சுற்றின் முதல் ஆட்டத்தில், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை சிஎஸ்கே வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. இறுதி ஆட்டத்தில் […]
ஐ.சி.சி. உலக லெவன்- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் ஒரே ஒரு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. உலக லெவன் அணிக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷகீத் அப்ரிடி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இது அப்ரிடி விளையாடும் கடைசி சர்வதேச போட்டியாகும். வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு பிராத்வெயிட் கேப்டனாக உள்ளார். இப்போட்டியில் டாஸ் வென்ற உலக லெவன் அணி கேப்டன் அப்ரிடி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து வெஸ்ட்இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. […]
ஐபிஎல் தொடரில் ஆடும் அணிகளில் ஆட்டம் தொடர்பான விவகாரங்களில் உரிமையாளர்களின் தலையீடு இருப்பதை கவுதம் காம்பீர் விமர்சித்துள்ளார். இதுவரை ஒரு முறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றிராத டெல்லி அணி, இந்த சீசனின் தொடக்கத்தில் காம்பீரின் தலைமையில் களம் கண்டது. கொல்கத்தா அணிக்கு இரண்டுமுறை கோப்பையை வென்று கொடுத்த வெற்றி கேப்டனான காம்பீரின் ஆட்டம் இந்த முறை எடுபடவில்லை. கேப்டனாகவும் வீரராகவும் சோபிக்காத காம்பீர், டெல்லி அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார். கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய பிறகு […]
இங்கிலாந்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், லார்ட்ஸில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் படுதோல்வியடைந்ததையடுத்து இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. ஆண்டர்சன் அந்த டெஸ்ட்டில் 4 விக்கெட்டுகளையே கைப்பற்றினார், பிராட் 1 விக்கெட்டைத்தான் கைப்பற்றினார். இதனையடுத்து முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வான், ஒன்று பிராட், இல்லையேல் ஆண்டர்சனை அணியிலிருந்து நீக்கி ஒரு எச்சரிக்கை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். இதற்கு முந்தைய இங்கிலாந்து தொடரிலும் கூட […]
பாகிஸ்தானின் ‘பூம் பூம்’ அதிரடி ஆல்ரவுண்டர் ஷாகித் அஃப்ரீடி லார்ட்ஸில் இன்று (மே 31) நடைபெறும் டி20 போட்டியில் உலக லெவன் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். முதலில் இங்கிலாந்து ஒருநாள் கேப்டன் இயன் மோர்கன் நியமிக்கப்பட்டிருந்தார், அவருக்குக் காயம் ஏற்படவே அவர் விளையாட முடியாத நிலை ஏற்பட ஷாகித் அப்ரீடிக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த காட்சி சர்வதேசப் போட்டி மூலம் கிடைக்கும் நிதி மே.இ.தீவுகளில் கிரிக்கெட் வளர்ச்சிக்கும், புயலால் பாதிக்கப்பட்ட ஸ்டேடியங்களை மறுகட்டுமானம் செய்யவும் பயன்படுத்தப்படவுள்ளது. […]
கிறிஸ் கெய்ல் பெரிய பெரிய சிக்சர்களுக்கும் சரவெடி டி20 இன்னிங்ஸ்களுக்கும்,சர்ச்சைகளுக்கும் புகழ் பெற்றவர். தன் வாழ்க்கையை வெளிப்படையாக வாழ்பவர் கெய்ல், அதனால் அவர் பேச்சும் வெளிப்படையாகவே இருக்கும், ஆனால் அது பல வேளைகளில் சர்ச்சைகளுக்கு வழிவகுப்பதாக அமைந்து விடும். ஆஸ்திரேலியாவில் நடந்த 2016-ம் ஆண்டு பிக்பாஷ் டி20 லீகின் போது ஒரு போட்டியில் டிவி தொகுப்பாளினி மெல் மெக் லாஃப்லின் என்பவரை நோக்கி, “உங்கள் கண்களை முதல் முறையாகப் பார்க்கிறேன்” என்றும் “இந்தப் போட்டியில் வென்ற பிறகு உங்களுடன் […]
சர்வதேச கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட்டில் கடுமையான விதிமுறைகளை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. அனில் கும்பளே தலைமையிலான ஐசிசி கிரிக்கெட் கமிட்டி மும்பையில் நடைபெற்ற 2 நாள் ஆலோசனைக்குப் பின் கடுமையான விதிகளை பரிந்துரைத்துள்ளது. அண்மையில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் பந்தை சேதப்படுத்திய புகாருக்கு ஆளாகியதையடுத்து பந்தை சேதப்படுத்துதல், சரியாக விளையாடாமல் இருத்தல் போன்றவற்றுக்கு கடுமையான தண்டனை மற்றும் அபராதம் விதிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. தனிநபர் வசைபாடுதல், தாக்குதல் போன்றவற்றில் ஈடுபட்டால் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் […]
சுரேஷ் ரெய்னா ஐபிஎல் 2018 சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றியில் முக்கியப் பங்களிப்பு செய்த நிலையில் ஊடகம் ஒன்றில் சில விரைவு கேள்விகளுகு சுறுசுறுவென பதில் அளித்தார். விரைவுக் கேள்விகளும் ரெய்னா பதில்களும் வருமாறு: யார் நல்ல என்டெர்டெய்னர்? – பிராவோ யார் லொடலொடவென பேசிக்கொண்டே இருப்பவர்- ஜடேஜா யார் அறுவை? – ஒருவரும் இல்லை யார் அதிகம் படிக்கக் கூடியவர்கள்: இந்திய வீரர் இல்லை எப்பவும் இயர்போனுடன் அலையும் வீர்ர்கள்: எல்லாரும்தான் அணியில் ஜோக்குகள் […]
தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித்,தென் ஆப்பிரிக்க அணி ஏபி டி வில்லியர்ஸை இழந்தது, இந்திய அணியில் விராட் கோலி இல்லாததற்குச் சமமாகும், இருவரின் இடத்தையும் யாராலும் நிரப்பமுடியாது என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்க அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஏபி டி வில்லியர்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த வாரம் திடீரென அறிவிப்பு வெளியிட்டார். 15 ஆண்டுகள் தென் ஆப்பிரிக்க அணிக்காக விளையாடிய டிவில்லியர்ஸ் 8765 ரன்கள் சேர்த்துள்ளார். தென் […]
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள், ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதைத் தொடர்ந்து ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த மாதம் 7-ம் தேதி 11-வது ஐபிஎல் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் தொடங்கியது. 2 ஆண்டு தடைக்குப் பிறகு இந்த ஆண்டில் சென்னை அணி உற்சாகமாக களமிறங்கி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு நடந்த இறுதி ஆட்டத்தில் சென்னை அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் […]
இலங்கை கிரிக்கெட் வாரியம் ,மேட்ச் ஃபிக்சிங்கிற்காக காலே மைதானத்தின் தன்மை மாற்றி அமைக்கப்பட்டதாக கூறப்படும் புகாரை நம்ப முடியவில்லை என தெரிவித்துள்ளது. மேட்ச் ஃபிக்சிங் தொடர்பான அல் ஜசீரா ஆவண படத்தை தொடர்ந்து காலே மைதான அதிகாரி தரங்கா இண்டிகா, கிரிக்கெட் வீரர் மெண்டிஸ் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதுதொடர்பாக பேசியுள்ள அந்நாட்டு கிரிக்கெட் வாரிய துணை தலைவர் மோகன் டி சில்வா, மைதானத்தின் தன்மை குறித்து அணியின் கேப்டன்களோ, நடுவர்களோ புகார் எதுவும் அளிக்கவில்லை என்று […]