இளம் வயதில் ஓய்வை அறிவித்த பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர்!

பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் (27). இவர் 2009-ம் ஆண்டு முதல் சர்வதேச போட்டிகளில் விளையாட தொடங்கினார்.இந்நிலையில் நடந்து முடிந்த உலகக் கோப்பையில் தொடரில் முகமது அமீர் 17 விக்கெட்டை வீழ்த்தினார்.
தற்போது முகமது அமீர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்து உள்ளார்.இது தொடர்பாக முகமது அமீர் ஒரு அறிக்கையை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.அதில் பாகிஸ்தான் அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது மகிழ்ச்சியாக உள்ளது. தற்போது நான் ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் அதிக கவனம் செலுத்த உள்ளேன் என கூறினார்.
மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தொடங்க உள்ளது.இதற்காக பாகிஸ்தான் அணி பல இளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதற்காகவும் நான் இந்த முடிவை எடுத்ததாக கூறினார்.பாகிஸ்தான் அணிக்காக முகமது அமீர் 36 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 119 விக்கெட்டை வீழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025