PAKvAFG : டாஸ் வென்ற பாகிஸ்தான்.! பந்துவீச தயாரான ஆப்கானிஸ்தான்.!

உலககோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 22வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் மோத உள்ளது. பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும், ஹஷ்மத்துல்லா ஷாஹிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும் மோதும் போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச தயாராகி வருகிறது.
பாகிஸ்தான் அணி இதுவரை 4 லீக் போட்டிகளில் விளையாடி 2இல் வெற்றியும், 2இல் தோல்வியும் கண்டு புள்ளி பட்டியலில் 5ஆம் இடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான் அணி 4 லீக் போட்டிகளில் விளையாடி 1 போட்டியில் மட்டுமே வெற்றிபெற்று, 3 போட்டிகளில் தோல்வியடைந்து கடைசி இடத்தில் உள்ளது.
பாகிஸ்தான் அணி சார்பாக கேப்டன் பாபர் அசாம் தலைமையில், அப்துல்லா ஷபீக், இமாம்-உல்-ஹக், முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), சவுத் ஷகீல், இப்திகார் அகமது, ஷதாப் கான், உசாமா மிர், ஷஹீன் அப்ரிடி, ஹசன் அலி, ஹாரிஸ் ரவுஃப் ஆகியோர் களமிறங்க உள்ளனர்.
ஆப்கானிஸ்தான் அணி சார்பாக, கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி தலைமையில், ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா, அஸ்மத்துல்லா உமர்சாய், இக்ராம் அலிகில் (விக்கெட் கீப்பர்), முகமது நபி, ரஷித் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன்-உல்-ஹக், நூர் அகமது ஆகியோர் களமிறங்க உள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஐபிஎலில் விளையாடுவாரா சஞ்சு சாம்சன்? ஆள்காட்டி விரலில் அறுவை சிகிச்சை.! வெளியான தகவல்..,
February 12, 2025
INDvENG : புரட்டி எடுத்த சுப்மன் கில்..இங்கிலாந்துக்கு இந்தியா வைத்த பெரிய இலக்கு!
February 12, 2025
“பேத்தி வேண்டாம்.. பேரன் வேண்டும்” – நடிகர் சிரஞ்சீவியின் பேச்சால் வெடித்தது சர்ச்சை.!
February 12, 2025
பேருந்து விபத்தில் சிக்கி 7 பேர் காயம்,.. காரணத்தை விளக்கி ஓட்டுநரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு!
February 12, 2025