பந்து வீச்சில் மிரட்டிய பஞ்சாப்.., தோல்வியை தழுவிய பெங்களூர்..!

Published by
murugan

பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் எடுத்து 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.

இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரின் 26 வது லீக் போட்டியில் பெங்களூர் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தனர்.

இதைத்தொடர்ந்து, முதலில் இறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 179 ரன்கள் எடுத்தனர். பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக கிறிஸ் கெய்ல் 46, கே.எல் ராகுல் 91* ரன் எடுத்தனர். 180 ரன்கள் இலக்குடன் பெங்களூர் அணியில் தொடக்க வீரராக விராட் கோலி, படிக்கல் இருவரும் களமிறங்கினார். ஆனால் ஆட்டம் தொடக்கத்திலேயே படிக்கல் 7 ரன்னில் வெளியேறினார்.

பின்னர் ரஜத் பட்டீதர் களமிறங்கினார். விராட் கோலியுடன் இணைந்த ரஜத் பட்டீதர் அணியின் எண்ணிக்கையை  சற்று உயரத்தினர். நிதானமாக விளையாடி வந்த விராட் கோலி 35 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து இறங்கிய மேக்ஸ்வெல் டக் அவுட்டானார். இதனால் பெங்களூர் அணி 62 ரன்னில் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

அடுத்து களமிறங்கிய ஏபி டிவில்லியர்ஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 3 ரன்னில் கேஎல் ராகுல் இடம் கேட்ச் கொடுத்து ஏபி டிவில்லியர்ஸ் வெளியேறினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரஜத் பட்டீதர் 31 ரன்களில் வெளியேறினார். பின்னர், களமிறங்கிய மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. கடைசியில் இறங்கிய ஹர்ஷல் படேல் 12 பந்தில் 2 சிக்ஸர், 3 பவுண்டரி விளாசி 31 ரன்கள் எடுத்தார்.

இறுதியாக பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் எடுத்து 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். பஞ்சாப் அணியில் ஹர்பிரீத் ப்ரா 3, ரவி விஷ்யா 2 விக்கெட்டை வீழ்த்தினர்.

பெங்களூர் மற்றும் பஞ்சாப் அணி இதுவரை தலா 7 போட்டிகளில் விளையாடி உள்ளன. இதில் பெங்களூர் அணி 5 போட்டிகள் வெற்றியும், 2 போட்டியில்  தழுவி 10 புள்ளிகள் பெற்றுள்ளது. பஞ்சாப் அணி மூன்று போட்டியில் வெற்றியும், 4 போட்டியில்  தழுவி 6 புள்ளிகளை பெற்றுள்ளது.

Published by
murugan

Recent Posts

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

3 minutes ago

வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…

1 hour ago

அமெரிக்காவுக்கு என்ன வேலை? போர் நிறுத்தியது தவறு…சுப்பிரமணியன் சுவாமி பேச்சு!

டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…

2 hours ago

இந்தியாவின் பாதுகாப்பை 10 செயற்கைக்கோள்கள் மூலம் 24×7 கண்காணிக்கிறோம் – இஸ்ரோ.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…

2 hours ago

தி.நகர் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து.., போராடும் தீயணைப்பு வீரர்கள்.!

சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…

3 hours ago

சென்னையில் ரயில் மோதி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு.!

சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர்  செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…

3 hours ago