நேற்று முன்தினம் நடந்த முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணி , நியூஸிலாந்து அணி உடன் மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் மோதியது.
முதலில் நியூஸிலாந்து அணி விளையாடி கொண்டு இருக்கும் போது 46.1 ஓவரில் 211 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் மழை பெய்ததால் போட்டி நிறுத்தப்பட்டு மீண்டும் நேற்று போட்டி தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய நியூஸிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 239 ரன்கள் எடுத்தது.
பின்னர் 240 என்ற இலக்குடன் களமிங்கிய இந்திய அணி தொடர்ந்து விக்கெட்டை இழந்தது இறுதியாக 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 221 ரன்கள் எடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இப்போட்டியில் ஜடேஜா 8-வது வீரராக களமிங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே இருந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜடேஜா 59 பந்தில் 77 ரன்கள் குவித்தார்.அதில் 4 பவுண்டரி , 4 சிக்ஸர் அடங்கும்.இதன் மூலம் உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் 8-வது விக்கெட்டுக்கு களமிறங்கி அதிக ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்து உள்ளார்.
இதற்கு முன் லான்ஸ் க்ளூசனர் 8-வது விக்கெட்டுக்கு களமிறங்கி 31 ரன்கள் அடித்து இருந்தார். அதுவே அதிகபட்ச ரன்களாக இருந்தது.தற்போது ரவீந்திர ஜடேஜா அந்த சாதனையை முறியடித்து உள்ளார்.
50 * – ரவீந்திர ஜடேஜா வி என்ஜெட், 2019
31 * – லான்ஸ் க்ளூசனர் வி ஏயூஎஸ், 1999
28 * – கேரி கில்மோர் வி இ.என்.ஜி, 1975
25 * – டெர்மட் ரீவ் வி எஸ்.ஏ., 1992
23 – வாரன் லீஸ் வி இ.என்.ஜி, 1979
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…
சென்னை : நாளை (ஜூலை 9, 2025) நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய…