RCB vs PBKS : குறுக்கே வந்த கௌசிக்.., மழை காரணமாக டாஸ் தாமதம்.!

மழை காரணமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

RCBVsPBKS

பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் – பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும் தலா 6 போட்டிகளில் விளையாடி 4-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளன. இரு அணிகளும் தற்போது 8-8 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன.

இப்போட்டியில் வெற்றி பெற்றால், புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேற முடியும். இதனால், இப்போட்டி இரு அணிகளுக்கும் மிக முக்கியம். ஆனால், சின்னசாமி ஸ்டேடியம் பெங்களூருக்கு சொந்தமானது என்பதால், ஆர்சிபி வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும், பஞ்சாப் வலுவாக இருப்பதால், சூழல் எப்படி வேண்டுமென்றாலும் மாறலாம். ஆனால் தற்போது பெங்களூருவில் மழை பெய்து வருவதால் போட்டி நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.  ஆம், குறுக்கே வந்த கௌசிக் வந்தால் என்பது போல் மழை காரணமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

7 மணிக்கே டாஸ் போட்டிருக்க வேண்டும், தற்போது, மழை பெய்து வருவதால் சின்னசாமி மைதானம் தார்பாய் கொண்டு மூடப்பட்டுள்ளது.

இதனால், 7.30 மணிக்கு போட்டி ஆரம்பிக்கும் முன் மழை நின்று விட வேண்டும் என்பதே தற்போது ஆர்சிபி ரசிகர்களின் வேண்டுதலாக இருக்கிறது. மழை நின்றவுடன் டாஸ் போடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை போட்டி ரத்து செய்யப்பட்டால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்படும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்