இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் ட்விட்டர் பக்கத்திற்கான ப்ளூடிக் நீக்கப்பட்டது.
சமூக வலைத்தளமான ட்விட்டர் 8.20 மில்லியன் பாலோவர்ஸை கொண்ட முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு வழங்கப்பட்ட ப்ளூ டிக்-ஐ நீக்கியுள்ளது. ட்விட்டரில் அரசு, செய்தி நிறுவனங்கள், முக்கிய பிரபலங்கள், விளையாட்டு வீரர்களுக்கு ப்ளூ டிக் வழங்கப்படுகிறது. கணக்கு மிக நீண்ட காலமாக செயலற்ற நிலையில் இருந்ததால் தான் ப்ளூடிக் நீக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
தோனி தனது கடைசி ட்வீட்டை இந்த ஆண்டு ஜனவரி மாதம் அதாவது கிட்டத்தட்ட ஏழு மாதங்களுக்கு முன்பு பதிவிட்டுள்ளார். இது ஏன் நடந்தது என்பது குறித்து ட்விட்டர் இன்னும் ஒரு அறிக்கையை வெளியிடவில்லை. ட்விட்டரின் இந்த செயல் கிரிக்கெட் வீரரின் ரசிகர்கள் மத்தியில் எரிச்சலடையச் செய்துள்ளது.
தோனி கடந்த 2014 இல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி அனைத்து விதமான சர்வேதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்தார். தோனி 350 ஒருநாள் மற்றும் 98 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 350 ஒருநாள் போட்டிகளில், தோனி 50.57 சராசரியில் 10773 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 10 சதங்கள் மற்றும் 73 அரைசதங்கள் அடங்கும்.
தோனி 98 டி20 போட்டிகளில் இரண்டு அரை சதங்கள் உட்பட 37.60 சராசரியாக 1617 ரன்கள் குவித்துள்ளார். டோனி தலைமையில் இந்தியா அணி 2010, 2013, மற்றும் 2014 இல் மூன்று ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பட்டங்களை வென்றது. இருப்பினும், தோனி இன்னும் ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…