Ruturaj Gaikwad[file image]
Ruturaj Gaikwad : தமிழக யூடூபரான மதன் கௌரியுடன் நடந்த ஒரு நேர்காணலில் ‘தல’ தோனியின் ஸ்வாரஸ்யமான ரகசியத்தை பற்றி ருதுராஜ் கெய்க்வாட் பேசி இருந்தார்.
தமிழக யூடூபரான மதன் கௌரி ஒரு அவரது யூடுப் சேனலில் ஒரு வீடியோவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட்டை அழைத்து ஒரு நேர்காணல் ஒன்றை நடத்தி இருந்தார். பல திரைப்பிரபலங்கள், தொழிலதிபர்கள், அரசியல் பிரபலங்கள் என பலரையும் அவரது யூடுப் சேனலில் அழைத்து நேர்காணல் நடத்தி இருக்கிறார்.
அந்த வரிசையில் இன்று அவர் வெளியிட்ட வீடியோவில் சிஎஸ்கே அணியின் கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட்டுடன் நடத்திய ஒரு நேர்காணல் ஒன்றை பதிவிட்டிருந்தார். மேலும், அந்த வீடியோவில் மதன் கௌரி கேள்வி எழுப்புவதும் அதற்கு ருதுராஜ் பதிலளிப்பதும் என நேர்காணல் சென்றது. அப்போது மதன் கௌரி அவரிடம் தோனியின் ஸ்வாரஸ்யமான ஏதேனும் விஷயம் உங்களுக்கு தெரியும் என்றால் அதை பகிரும்படி கேட்டுக் கொண்டார்.
அதற்க்கு ருதுராஜ், “எனக்கு தெரிந்த தோனியின் ஸ்வாரசமயமான விஷயம் ஒன்று, அவர் எப்போதுமே இரவில் தாமதமாகவே உறங்குவார் அது அவருக்கு மிகவும் பிடிக்கும். அதிலும் குறிப்பாக போட்டிக்கு முந்தைய நாள் தாமதமாக உறங்கி, தாமதமாகவே காலையில் விழித்து கொள்வார். 2019-ம் ஆண்டு நான் சிஎஸ்கே அணியில் இணைந்த போது எப்போது எந்திரிக்க வேண்டும் என்று அவரிடம் கேட்டிருக்கிறேன்.
அதற்கு அவர் ‘எனக்கு சீக்கிரமாக உறங்கி சீக்கிரமாக எழுவது பிடிக்காது’ உனக்கு போட்டியின் மீது சிந்தனை இருந்தாலே போதுமானது. நீயும் தாமதமாக உறங்கி, தாமதாகவே எழுந்து கொள்’ என்று எனக்கும் அந்த பழக்கத்தை பரிந்துரைத்தார். அதனால் நானும் இப்போது அதை பின்பற்றி முயற்சித்து வருகிறேன் “, என்று ருதுராஜ், தோனியின் ஸ்வாரஸ்யமான இந்த விஷயத்தை அந்த வீடியோவில் பகிர்ந்திருந்தார்.
கோழிக்கோடு : கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் நேற்று அவசர சிகிச்சை பிரிவு…
கோவா : நேற்று (மே 2) கோவாவில் உள்ள ஒரு கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் , பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
சென்னை : தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் இன்று (மே 3)…
கோவா : ஷிர்கானில் ஆண்டுதோறும் நடைபெறும் தேவி லாராய் ஜாத்ராவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏழு பேர்…
பெங்களூர் : இந்த சீசனின் 52வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மீண்டும்…