நேற்று வெற்றி பெற்ற போதிலும் சஞ்சு சாம்சனுக்கு ரூ.12 லட்சம் அபராதம்..!
சஞ்சு சாம்சனுக்கு பஞ்சாப் அணிக்கு எதிராக நேற்றைய போட்டியில் ஓவர் வீச அதிக நேரம் எடுத்து கொண்டதால் ரூ.12 லட்சம் விதிக்கப்பட்டது.
நேற்று நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது. இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி இருந்தபோதிலும், ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ஓவர் வீச அதிக நேரம் எடுத்து கொண்டதால் ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சி.எஸ்.கேவின் எம்.எஸ் தோனி, மும்பையின் ரோகித் சர்மா, கொல்கத்தா அணியின் இயோன் மோர்கன் மற்றும் ஆர்சிபியின் விராட் கோலி ஆகியோருக்குப் பிறகு அபராதம் செலுத்தும் ஐந்தாவது கேப்டன் சாம்சன் ஆவார்.