இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஷகிப் அல் -ஹசன் இடம் பெறவில்லை !

வங்காளதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்று பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.இந்த இரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி 26-ம் தேதியும் , இரண்டாவது போட்டி 28-ம் தேதியும் மற்றும் மூன்றாவது போட்டி 31-ம் தேதியும் நடைபெற உள்ளது.
இப்போட்டி கொழும்பில் நடைபெற உள்ளது.இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாட உள்ள வீரர்களின் பட்டியலை நேற்று முன்தினம் வங்காளதேச அணி அறிவித்தது. இப்போட்டியில் உலகக்கோப்பையில் 606 ரன்கள் அடித்து 11 விக்கெட்டை வீழ்த்திய ஷகிப் அல் -ஹசன் புனித பயணம் செல்வதால் அணியில் இடம் பெறவில்லை.
திருமணம் நடைபெற உள்ளததால் லிட்டான் தாஸ் அணியில் இடம் பெறவில்லை.மேலும் உலகக்கோப்பையில் இடம் பிடித்த அபு ஜெயத் நீக்கப்பட்டு உள்ளார். இடது கை பந்து வீச்சாளர் தைஜூல் இஸ்லாம் ,அனாமுல் ஹக் ஆகியோர் நீண்ட நாள்களுக்கு பிறகு களமிங்கி உள்ளனர்.கேப்டனாக மோர்தசா தொடருகிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025